Share it if you like it
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பின் 15 -வது உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க் நகரில் இன்று (செவ்வாய்கிழமை) தொடங்கி வரும் 24-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி தென்னாப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். இந்த மாநாட்டிற்கிடையே சீனா அதிபர் ஜி ஜின்பிங்குவை பிரதமர் மோடி சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.ஆனால் இது குறித்து முடிவு செய்யப்படவில்லை என வெளியூரபுச் செயலாளர் வினய் குவாத்ரா டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சீன அதிபரை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கும் பட்சத்தில் லடாக் பிரச்சனைக்கு பிறகு ,அதுவே முதல் சந்திப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it