முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டு தேசத்தின் கொள்கையை பிரதமர் மோடி மாற்றியுள்ளார் – ஆளுநர் ஆர்.என்.ரவி !

முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டு தேசத்தின் கொள்கையை பிரதமர் மோடி மாற்றியுள்ளார் – ஆளுநர் ஆர்.என்.ரவி !

Share it if you like it

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கவர்னர் மாளிகையில் உள்ள அவ்வையார் சிலைக்கு கவர்னர் ரவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் ஆர்.என்.ரவி கூறியதாவது:

அனைவரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளர்ச்சியை மீண்டும் உறுதி செய்ய வேண்டும். பிரதமர் மோடி பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கான பல்வேறு அடிப்படை மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். மகளிர் மேம்பாடு, முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டு தேசத்தின் கொள்கையை பிரதமர் மோடி மாற்றியுள்ளார்.

குறிப்பிடத்தக்க அளவிற்கு மாணவிகளின் சேர்க்கை உயர்ந்துள்ளது. பல இடங்களில் மாணவர்களைவிட மாணவிகள்தான் ஆராய்ச்சி படிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பெண்களின் சுகாதாரத்திற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒவ்வொரு அம்சங்களிலும் ஆண்களுக்கு சமமாக பங்களித்து வருகிறார்கள்.

பார்லிமென்ட், சட்டசபை தேர்தல்களில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளதால், சட்டங்களை உருவாக்குவதிலும் பெண்களின் பங்கு அதிகரித்துள்ளது. 2047ம் ஆண்டுக்குள் நமது தேசம் தன்னிறைவு பெற்ற நாடாக திகழ வேண்டும் என்பது நமது நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.


Share it if you like it