பிரதமர் மோடி அசால்டாக ட்ரோனை இயக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜி20 தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு டெல்லியில் செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த மாநாடு, இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் கட்டடத்தில் நடைபெறவிருக்கிறது. ஆகவே, இக்கட்டடத்தை சீரமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, சுமார் 2,700 கோடி ரூபாய் செலவில் இக்கட்டடம் மறுசீரமைக்கப்பட்டது. இக்கட்டடத்தின் 3-வது தளத்தில் 7,000 பேர் அமரக்கூடிய வகையில் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு, பாரத் மண்டபம் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
இந்த புதிய கட்டடத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது. புதிய கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதாவது, இந்த கட்டட திறப்பு விழா வித்தியாசமாக ஆளில்லாத குட்டி விமானத்தின் மூலம் திறந்து வைக்கப்பட்டது. அந்த ட்ரோனை பிரதமர் மோடி அசால்டாக இயக்கினார். இந்த வீடியோ காட்சிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.