இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என ரஷ்ய அதிபர் புடின் பாரதப் பிரதமர் மோடிக்கு உறுதி அளித்துள்ளதாக தற்பொழுது செய்தி வெளியாகியுள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடுமையான போர் மேகம் சூழ்ந்துள்ளது. சிறிய நாடுகள், வல்லரசு நாடுகள் மற்றும் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் போரை நிறுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் புரிவதை உடனே நிறுத்த வேண்டும். எங்களுக்கு உதவ இந்தியா முன்வர வேண்டும் என அந்நாட்டு, தூதர் உருக்கமான வேண்டுகோள் விடுத்து இருந்தார். அந்த வகையில், நேற்றைய தினம் பாரதப் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபரிடம் தொலைபேசி வாயிலாக இருநாட்டு விவகாரம் மற்றும் இந்தியர்கள் பாதுகாப்பு குறித்து பேசியதாக கூறப்படுகிறது. அப்பொழுது, உக்ரைனிலுள்ள இந்தியர்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று புடின் பாரதப் பிரதமருக்கு வாக்குறுதி அளித்துள்ளதாக செய்தி தற்பொழுது வெளியாகியுள்ளது.