சுரங்கத்தில் இருந்து வெற்றிகரமாக மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் பேசிய பிரதமர் மோடி !

சுரங்கத்தில் இருந்து வெற்றிகரமாக மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் பேசிய பிரதமர் மோடி !

Share it if you like it

உத்தரகண்ட் மாநிலம் சில்க்யாராவில் சுரங்கம் தோண்டும் பணியில் 41 தொழிலாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது கடந்த 12 ஆம் தேதி திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக சுரங்கம் இடிந்து விழுந்து சுரங்கத்தை விட்டு வெளியேறும் வழிகள் அடைபட்டன. இதனால் கடந்த 17 நாட்களாக தொழிலாளர்கள் சுரங்கத்திற்கு உள்ளே சிக்கி உயிருக்கு போராடினர். தொழிலாளர்களை மீட்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் என ஏராளமான வீரர்கள் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இவர்கள் மட்டுமின்றி ஆஸ்திரேலியாவை சேர்ந்த சுரங்க மீட்பு நிபுணர்கள் என பல்வேறு குழுவினர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தொடக்கத்தில் கிடைமட்டமாக துளையிட்டு தொழிலாளர்களை மீட்கும் பணி தொடங்கியது. ஆகர் என்ற இயந்திரத்தின் மூலமாக இந்த துளையிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஆனால், சுரங்கத்தில் இருந்த கான்கிரிட் கம்பிகளில் அகர் இயந்திரத்தின் பிளேடுகள் பட்டு உடைந்தன. அந்த பிளேடுகளும் இரும்பு கம்பிகள், கம்பி வலைகள் இயந்திரத்தின் பிளேடுகளுடன் சிக்கிக் கொண்டதால் பல மணி நேரம் மீட்புப் பணி தாமதமானது.

17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு 41 தொழிலாளர்களும் மீட்கப்பட்டது தேசத்தையே நிம்மதி அடைய செய்து இருக்கிறது. இந்த நிலையில் தனது உயிரை பணயம் வைத்து சுரங்கத்திற்குள் இறங்கி தொழிலாளர்களை மீட்ட தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களில் ஒருவரான மன்மோகன் சிங் தன்னுடைய அனுபவத்தையும் உணர்வையும் வெளிப்படுத்தி உள்ளார். தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்து இருக்கும் பேட்டியில், “நான் அந்த சுரங்கத்தை அடைந்த அந்த தருணத்தில் 41 தொழிலாளர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சி அடைந்தார்கள். அவர்கள் மீட்கப்படுவார்கள் என்று தொடர்ந்து நம்பிக்கை அளித்துக்கொண்டே இருந்தோம். அவர்களின் மன நிலையை திடமாக வைத்திருக்க முயற்சித்தோம்.” என்றார். இந்நிலையில் வெற்றிகரமாக 41 தொழிலாளர்களும் வெளிவந்த நிலையில் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக அவர்களுடன் பேசினார்.


Share it if you like it