விலைமதிப்பற்ற பொருளை பரிசாக வழங்கிய பிரதமர் மோடி – நெகிழ்ச்சியில் தமிழக மக்கள்  !

விலைமதிப்பற்ற பொருளை பரிசாக வழங்கிய பிரதமர் மோடி – நெகிழ்ச்சியில் தமிழக மக்கள் !

Share it if you like it

உலகப் பணக்காரர்களில் ஒருவரும், மைக்ரோசாப்ட் இணை நிறுவனருமான பில்கேட்ஸ் அவர்கள் டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து நேரடியாக கலந்துரையாடினார். இந்த விவாதத்தில் செயற்கை நுண்ணறிவு, சுற்றுச்சூழல், பருவ கால மாற்றம், பெண்கள் முன்னேற்றம், தொழில்நுட்பம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேசினர்.

பில்கேட்ஸ் கேள்விகளுக்கு பிரதமர் அளித்த பதிலில் இந்தியாவின் பெருமையை எடுத்து கூறினார். பிரதமர் மோடி கூறியதாவது: இந்தியா அனைத்து துறைகளிலும் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. கிராமங்கள் வரை தொழில்நுட்பம் சென்று வருகிறது. டிஜிட்டல் முறை இளையோர், பெண்களை கவர்ந்துள்ளது. சாட்ஜிபிடியை பலரும் பயன்படுத்த துவங்கி உள்ளனர். புதிய தொழில்நுட்பங்களை ஆர்வமாக கற்க பெண்கள் தயாராக உள்ளனர். சைக்கிள் கூட ஓட்ட தயங்கிய பெண்கள் இப்போது விமானம் வரை ஓட்டுகின்றனர். தமிழகம், காசியில் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் படகு ஓடத் துவங்கி உள்ளது என்று பேசினார்.

தமிழகத்தின் தூத்துக்குடியில் கடல் பகுதியில் எடுத்த முத்து, மற்றும் டார்ஜீலிங், நீலகிரியில் உருவான டீத்தூளையும் , களிமண்ணால் உருவான மண்குதிரைகள் , பில்கேட்சுக்கு பரிசாக பிரமதர் மோடி வழங்கினார். இதனை கொடுக்கும் போது உள்ளூர் பொருட்களை வாங்குங்கள் என மக்களை வலியுறுத்துகிறேன். இதன் மூலம் பெருமை கிட்டும் என்றார்.


Share it if you like it