“என் மண் என் மக்கள்” நிறைவு விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி !

“என் மண் என் மக்கள்” நிறைவு விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி !

Share it if you like it

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளரிடம் பேசிய அண்ணாமலை,

டெல்லியில் கடந்த இரண்டு நாட்கள் பாஜகவின் சிறப்பு செயற்குழு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி முழுமையாக பங்கேற்றார். இதில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில் வளர்ச்சி அடைந்த பாரதம் 2047 – இலக்கு, அதற்கு என்ன செய்தோம், என்ன செய்ய போகிறோம் என்ற தீர்மானம், மற்றுறொரு தீர்மானமாக எதிர்கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியல், அதை எப்படி இந்திய மக்கள் நினைக்கிறார்கள் என்ற தீர்மானம்,

அதே தீர்மானத்தில், மறுபடியும் மூன்றாவது முறையாக பாஜகவை ஆட்சியில் அமர்த்த மக்கள் முடிவு செய்துள்ளார்கள் என்ற தீர்மானத்தை பாஜகவின் மூத்த தலைவர்கள் கொண்டு வந்தார்கள்.

மேலும் ஒரு சிறப்பு தீர்மானமாக இராமர் கோயில் கட்டியதற்கு, பிரதமர் மோடி, உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற பாஜக தொண்டர்கள், தலைவர் சபதம் எடுத்துள்ளனர், அதில் இன்னும் 100 நாட்கள் கடுமையாக பணி செய்து, பாஜக 370- தொகுதிகளிலும், தேஜக கூட்டணி 400 எண்ணிக்கையில் வெற்றி பெரும் எனத் தெரிவித்தார்.

கூட்டணிக் குறித்து நேரம் வரும் போது பேசப்படும் எனத் தெரிவித்தார்.

வருகின்ற 27-02-2024- மதியம் 2 மணிக்கு பல்லடத்தில் என் மண் என் மக்கள் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் எனத் தெரிவித்தார். தமிழகத்தில் பிரதமர் மோடி இரண்டு நாள் தங்குகிறார்.

2024 தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொண்ட திருமாவளவன், சப்ப கட்டு கட்டுகிறார் எனத் தெரிவித்தார்.

பாஜக தொண்டர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில் தரையில் அமர்ந்து, பிரதமர் மோடியின் பேச்சை கேட்டதாக தெரிவித்தார். பாஜக கூட்டத்தில், யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமாலும் அமரலாம், பிரதமர் மோடி அருகில் செல்லலாம் எனத் தெரிவித்தார். நானும் சாதாரண தொண்டன் தான் எனக் கூறி தான் தரையில் அமர்ந்ததற்கு விளக்கம் அளித்தார்.


Share it if you like it