வறுமையின் வேதனையிலிருந்து மக்களை காப்பாற்றிய பிரதமர் மோடியின் “ஆயுஷ்மான் பாரத்” !

வறுமையின் வேதனையிலிருந்து மக்களை காப்பாற்றிய பிரதமர் மோடியின் “ஆயுஷ்மான் பாரத்” !

Share it if you like it

மக்கள் மருந்தக தினமாக மார்ச் 7 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. தரமான மருந்துகளை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவதையே பிரதமரின் இந்திய மக்கள் மருந்தக திட்டம் செயல்படுத்தப்பட்டது.
மக்கள் மருந்தக தினத்தை நாம் கொண்டாடும் வேளையில், மலிவு விலை மருந்தக சேவை வழங்கும் சுகாதாரத்துறையில் உள்ள அனைவருக்கும் எனது இதயபூர்வ நல்வாழ்த்துக்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக ஆளுநர் X பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-

பாரதம் ஒரு குடும்பம் என்ற பார்வையுடன் தரமான மருந்துகளை அனைவரும் அணுகக்கூடியதாகவும், குறிப்பாக ஏழைகளுக்கு மலிவு விலையில் கிடைக்கக் கூடியதாகவும் செய்த பிரதமர் மோடி தலைமையிலான பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தக திட்டம் சுகாதார பராமரிப்பு முறையை மாற்றியமைத்து வருகிறது.

பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் மருந்தக மையங்கள் மூலம் நாட்டில் விலை உயர்ந்த மருந்துகள் மிக, மிக குறைந்த விலையில் நமது மக்களுக்குக் கிடைக்கின்றன. இந்த முன்முயற்சி ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் இணைந்து சுகாதார பராமரிப்பில் புரட்சியை ஏற்படுத்தி நமது கோடிக்கணக்கான சகோதர, சகோதரிகளை வறுமையின் வேதனையிலிருந்து காப்பாற்றியுள்ளது. இன்று ஆறாவது மக்கள் மருந்தக தினத்தை நாம் கொண்டாடும் வேளையில், மலிவு விலை மருந்தக சேவை வழங்கும் சுகாதாரத்துறையில் உள்ள அனைவருக்கும் எனது இதயபூர்வ நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


Share it if you like it