ஜாலியன் வாலாபாக் படுகொலை: உண்மையை பேசிய பா.ஜ.க. மூத்த தலைவர்… கதறிய தி.மு.க.வினர்!

ஜாலியன் வாலாபாக் படுகொலை: உண்மையை பேசிய பா.ஜ.க. மூத்த தலைவர்… கதறிய தி.மு.க.வினர்!

Share it if you like it

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு ஆதரவாக செயல்பட்ட ஒரே கட்சி நீதிக்கட்சி என்று பா.ஜ.க. மூத்த தலைவர் பேசியதற்கு தி.மு.க.வினர் அலறிய காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.

பிரபல தனியார் ஊடகமான நியூஸ்-18 இனம், மொழி அரசியலைப் பேசுவது உரிமைக்காக! வாக்குக்காக! என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒன்றினை நடத்தியது. இந்நிகழ்ச்சியில், பா.ஜ.க. பொதுச் செயலாளர் இராம ஸ்ரீனிவாசன், தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தி.மு.க. ஆதரவாளர் நாஞ்சில் சம்பத், மதிமாறன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில், பா.ஜ.க. மூத்த தலைவர் பேசும் போது இவ்வாறு கூறினார் ;

நீதிக்கட்சியை பற்றி இவ்வளவு பேசுகிறீர்கள். ஜாலியன் வாலாபாக் படுகொலை 1919 – ஆம் ஆண்டு ஏப்ரல் 13 -ல் நடைபெற்றது. ஆயிரகணக்கான மக்களை ஒரு மைதானத்தில் வைத்து ரெசினால்டு டையர் என்ற ராணுவ அதிகாரி சுட்டுக்கொன்றான். இச்சம்பவம், உலகத்தையே கொதிப்பில் ஆழ்த்தியது. உலகத்தின் மனசாட்சியே கொதித்தெழுந்த நிகழ்வு அது. அதனை, ஆதரித்து பேசிய ஒரே கட்சி. அதற்கு, அறிக்கை விட்ட ஒரே கட்சி நீதிக்கட்சிதான். ஆங்கிலேயர்களின் விசுவாசமான கட்சி நீதிக்கட்சி என்று கூறினார். இதனால், கோவமடைந்த கழக கண்மணிகள் அந்த நிகழ்ச்சியில் கலவரம் செய்ய முயன்ற காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.


Share it if you like it