போராட்டம் பண்ணுனா BMW, INNOVA வாங்கலாம்: போலி போராளிகளை தோலுரிக்கும் பத்திரிகையாளர்!

போராட்டம் பண்ணுனா BMW, INNOVA வாங்கலாம்: போலி போராளிகளை தோலுரிக்கும் பத்திரிகையாளர்!

Share it if you like it

தமிழகத்தைப் பொறுத்தவரை மத்திய அரசையும், மத்திய அரசின் திட்டங்களையும் எதிர்த்து போராட்டம் நடத்தினால் இன்னோவா கிறிஸ்டா முதல் பி.எம்.டபுள்யூ. கார் வரை வாங்கலாம் என்று மூத்த பெண் பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர் கூறியிருக்கிறார்.

இந்தியா எவ்விதத்திலும் தன்னிறைவு அடைந்து விடக்கூடாது. வல்லரசு நாடாகி விடக்கூடாது என்பதில் பெரியண்ணன் அமெரிக்கா முதல் ஐரோப்பிய நாடுகள் வரை கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகின்றன. இதற்காக, நம் நாட்டில் ஏராளமான கைக்கூலிகளை வைத்திருக்கின்றன. நம் நாட்டில் புதிதாக ஏதேனும் மிகப்பெரிய திட்டங்களை மத்திய அரசு தொடங்கினால், உடனே இங்கிருக்கும் தனது கைக்கூலிகளுக்கு பணத்தை கொடுத்து போராட்டத்தை தூண்டி விடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றன. இவர்களும் கூலிக்கு மாறடிக்கும் நாய்களைப் போல, பணம் என்னும் எலும்புத்துண்டுக்கு வாலை ஆட்டிக் கொண்டு, நம் நாட்டுக்கு எதிராக போராடுவார்கள்.

பிற மாநிலங்களில் இப்படியொரு நிலை இல்லை என்றாலும், தமிழகத்தில் இதுபோன்ற அந்நிய கைக்கூலிகளின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கிறது. இப்படித்தான் கூடங்குளம் அணுமின் நிலையப் போராட்டம் நடந்தது என்று அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருந்தார். அதாவது, நம் நாடு மின்சாரத்தில் தன்னிறைவு பெறும் வகையில், ரஷ்யாவுடன் இணைந்து கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தை தொடங்கியது. இதைத் தடுக்கும் நோக்கில் மிஷனரிகளிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அந்நியக் கைக்கூலிகள் போராட்டத்தை நடத்தினார்கள். ஆனாலும், மத்திய அரசு அசரவில்லை. திட்டத்தை வெற்றிகரமாக முடித்தது. எனினும், இப்போராட்டம் இன்னும் நீருபூத்த நெருப்பாக இருந்துகொண்டுதான் இருக்கிறது.

இந்த சூழலில், வேதாந்தா எனும் நிறுவனம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை தொடங்கியது. இந்த ஆலை தொடங்கும்போது, இந்தியாவுக்கே காப்பர் போதாது என்பதால் நட்பு என்கிற போர்வையில் இருக்கும் மிஷனரி நாடுகள் கண்டுகொள்ளவில்லை. ஆனால், இங்கு தயாரிக்கப்படும் காப்பர் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலை வரவே, வழக்கம்போல தங்களது ஏவல் நாய்களை ஏவிவிட்டு போராட்டத்தில் ஈடுபட வைத்தது. இதைத்தான் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார். இதற்கு பொதுமக்களை கவர்னர் அவதூறாகப் பேசிவிட்டதாக இங்கிருக்கும் முதலைகள் நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில்தான், மூத்த பெண் பத்திரிகையாளரான சந்தியா ரவிசங்கர், இதுபோன்ற போலி போராளிகளின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டி இருக்கிறார். தமிழகத்தில் போராட்டம் நடத்தினால் இன்னெோவா கிறிஸ்டா முதல் பி.எம்.டபுள்யூ. கார் வரை வாங்கலாம் என்று கூறியிருக்கிறார். குறிப்பாக, பூவுலகின் நண்பர்கள் அமைப்பு பற்றிய ஒரு ரகசிய தகவலையும் அம்பலப்படுத்தி இருக்கிறார் சந்தியா ரவிசங்கர். மேலும், மீனவ மக்களுக்கு பணம் கொடுத்து போராட்டத்தில் ஈடுபட வைத்த விவகாரத்தையும் வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ உங்களுக்காக…


Share it if you like it