ஆரோக்கியமான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தில் வேரூன்றியிருக்கும் பழங்குடியின மக்களை கண்டு பெருமிதம் கொள்கிறேன் – ஆளுநர் ஆர்.என் ரவி !

ஆரோக்கியமான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தில் வேரூன்றியிருக்கும் பழங்குடியின மக்களை கண்டு பெருமிதம் கொள்கிறேன் – ஆளுநர் ஆர்.என் ரவி !

Share it if you like it

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாள் சுற்றுப் பயணமாக உதகைக்கு நேற்று சென்றார். இதனை தொடர்ந்து இன்று உதகை தலைகுந்தா அருகேயுள்ள முத்தநாடு தோடர் பழங்குடியினர் கிராமத்திற்கு வந்த ஆளுநருக்கு தோடர் பழங்குடியின மக்கள் தங்களது கலாச்சார உடை அணிவித்து வரவேற்றனர். இதுதொடர்பாக ஆளுநர் ரவி X பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-

நீலகிரி, உல்லத்தி கிராமத்தில் உள்ள முத்தநாடுமந்து புனித தோடர் ஆலயத்துக்குச் சென்று அனைவரின் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்தேன். மேலும் தோடர் இன பெரியவர்கள், சகோதர, சகோதரிகள் ஆகியோருடன் நெருக்கமாக கலந்துரையாடினேன். எனது சொந்த குடும்ப உறுப்பினர்களுடன் இருப்பது போல் உணர்ந்தேன். எண்ணிக்கையில் குறைந்தவர்களாகவும் நமது நாட்டின் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினங்களில் ஒன்றில் வாழ்பவர்களாகவும் அவர்கள் உள்ளனர். காலனித்துவ ஆட்சியாளர்கள் தங்கள் கலாசாரத்தை எவ்வாறு அழிக்க முயன்றனர் என்பதை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். தங்களின் ஆரோக்கியமான பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தில் வேரூன்றியிருக்கும் அதே வேளையில் நவீனத்துவத்துடன் ஒத்துப்போகும் மாற்றத்தை அந்த மக்கள் தழுவுவதைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன். அவர்களின் வாழ்க்கை முறை, இயற்கையுடன் சரியான இணக்கத்துடன் மற்றவர்களுக்கு ஒரு உத்வேகமாகவும், நிலையான உலகளாவிய எதிர்காலத்திற்கு இன்றியமையாத சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கைமுறைக்கான மாண்புமிகு #பிரதமர்மோடியின் அழைப்புக்கு ஒரு வாழும் சாட்சியாகும்.” – ஆளுநர் ரவி


Share it if you like it