கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, எந்த மாதிரியான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. வல்லரசு நாடுகள் முதல் பல ஏழை நாடுகளுக்கு இந்தியா செய்த மருத்துவ உதவிகள் என்னென்ன. மத்திய அரசு இன்னும் எவ்வாறு மக்களுக்கு உதவலாம் என்று எடுத்து கூற வேண்டிய பொறுப்பான இடத்தில் உள்ள பல ஊடகங்கள் இன்று மத்திய அரசு, பாரதப் பிரதமர் மோடி மீது தவறான எண்ணம் உருவாகும் வகையில் தொடர்ந்து தங்களின் வன்மத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் என்பது நிதர்சனம்.
இந்தியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டு முடிக்க 2 முதல் 3 ஆண்டுகள் வரை ஆகலாம், அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 2 அல்லது 3 மாதத்தில் தடுப்பூசி போடுவது இயலாத காரியம் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதில் நிறைய சவால்கள் உள்ளன என்று சீரம் நிறுவன தலைவர் பூனாவாலா தெரிவித்து உள்ளதாக புதிய தலைமுறை செய்தி வெளியிட்டு உள்ளது.
சீரம் நிறுவன தலைவர் கூறியது என்னவெனில் உலகம் முழுதும் கொரோனா தடுப்பூசி போட்டு முடிக்க 2 அல்லது 3 வருடம் ஆகும் என்று குறிப்பிட்டு உள்ளார். ஆனால் புதிய தலைமுறை இந்தியாவில் தடுப்பூசி போட்டு முடிக்க 2 அல்லது 3 ஆண்டுகள் ஆகலாம் என்று குறிப்பிட்டு உள்ளது. உண்மை என்னவென்று புரிந்து கொள்ளாமல் மக்களிடையே குழப்பத்தையும், மோடி மீது மக்களுக்கு வெறுப்பை உருவாக்கும் விதமாக. புதிய தலைமுறையில் பணியாற்றி வரும் நெறியாளர்கள் இது போன்ற மிக கீழ்த்தரமான செயல்களை செய்து வருவதாக பலர் கடும் கண்டனத்தை அந்த ஊடகத்திற்கு தெரிவித்து வருகின்றனர்.
Important Information pic.twitter.com/M1R1P6rqUp
— SerumInstituteIndia (@SerumInstIndia) May 18, 2021
முன்களப்ஸ் ஆஹா!! ஓஹோ!! pic.twitter.com/RMFN5h303J
— #சங்கி_Mahesh M 🚩 (@mahesh74391485) May 15, 2021
ஆங்கிலம் தெரியாதவனா நீ ?
இந்தியாவுக்கு போட்டு முடிக்க 2-3 வருசம்னு எங்க போட்டிருக்கு ?அவங்க சொல்றது உலகம் முழுதும் போட்டு முடிக்க 2-3 வருடம்.
ஒன்னா ஆங்கிலம் படிங்க இல்லாட்டி படிச்சவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுகங்க. 🙏 https://t.co/XP48lnomKp pic.twitter.com/tukcGDAtZA— Selva Kumar (@Selvakumar_IN) May 18, 2021