மத்திய அமைச்சரை புறக்கணித்த விவகாரம்: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய புதுகை கலெக்டர்!

மத்திய அமைச்சரை புறக்கணித்த விவகாரம்: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய புதுகை கலெக்டர்!

Share it if you like it

மத்திய அமைச்சரை புறக்கணித்ததாக புதுகை கலெக்டர் மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கும் நிலையில், அவரை சமூக வலைத்தளங்களில் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக சுற்றுப் பயணம் செய்தார், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை இணை அமைச்சர் வி.கே.சிங். குறிப்பாக, திருமயம் அருகே ஓச்சம்பட்டியில் நடந்த பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் வி.கே சிங் பங்கேற்றார். தொடர்ந்து, பொற்பனைக்கோட்டை அகழ்வாராய்ச்சி பணிகளை பார்வையிட்டார். மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங்கை, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்ஸி ரம்யா மற்றும் அதிகாரிகள் மரியாதை நிமித்தமாகக் கூட சந்திக்கவில்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் கபில் மொரெஷ்வர் படேல், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது கலெக்டராக இருந்த கவிதா ராமு, தாமதமாக வந்த சம்பவம் சர்ச்சைக்குள்ளானது. அதேபோல், தற்போது கலெக்டர் மெர்ஸி ரம்யா, மத்திய இணை அமைச்சரை புறக்கணித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அமைச்சரை புறக்கணித்த கலெக்டர், சமூக வலைதளங்களில் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதுகுறித்து புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் செல்வம் அழகப்பன் கூறுகையில், “புதுக்கோட்டை மாவட்டத்தில் இணை அமைச்சர் வி.கே.சிங் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலெக்டரோ அவரது பிரதிநிதியாக அதிகாரிகளோ கலந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால், யாருமே கலந்துகொள்ளாமல் நிகழ்ச்சியை புறக்கணித்திருக்கிறார். இவர்கள் புறக்கணித்ததற்கான காரணம் தெரியவில்லை” என்றார்.


Share it if you like it