பஞ்சாப் மாநிலத்தில் ‘ஐ லவ் பாகிஸ்தான்’ என்று அச்சிடப்பட்ட பலூன்கள் கிடந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டம் ஆதம்பூர் அருகே உள்ளது குர்த்பூர் கிராமம். இக்கிராமத்திலுள்ள வயல் பகுதிகளில் ‘ஐ லவ் பாகிஸ்தான்’ என்று அச்சிடப்பட்ட பலூன்கள் கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார், அந்த பலூன்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட காவல்துறை அதிகாரி ஹர்ஜிந்தர சிங் கூறுகையில், “குர்த்பூர் கிராமத்தில் உள்ள வயல் பகுதிகளில் ‘ஐ லவ் பாகிஸ்தான்’ என்று அச்சிடப்பட்ட ஏராளமான பலூன்கள் கிடந்தன. இதுகுறித்த தகவலின் பேரில சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டோம். மேலும், அங்கு கிடந்த பலூன்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறோம். இந்த பலூன்கள் நிச்சயமாக பாகிஸ்தானில் இருந்து பறந்து வந்திருக்க வாய்ப்பில்லை. உள்ளூரிலுள்ள யாரோ அல்லது எந்த அமைப்போதான் இந்த வேலையை செய்திருக்க வேண்டும். அது யார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்” என்றார்.
பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் ஆதரவுபெற்ற காலிஸ்தான் தீவிரவாதிகள் அதிகளவில் இருக்கின்றனர். இவர்கள் பஞ்சாப் மாநிலத்தை எப்படியாவது கைப்பற்றி பாகிஸ்தானுடன் இணைத்து விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள். இவர்கள்தான், மத்திய அரசுக்கு எதிராக பஞ்சாப் மக்களை தூண்டிவிட்டு போராடத்தில் ஈடுபடவைத்து வருகின்றனர். இதன் காரணமாகவே, விவசாய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தபோது, பஞ்சாப் மக்களை தூண்டிவிட்டு மிகப்பெரிய அளவிலான போராட்டத்தை தூண்டி விட்டார்கள். இவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் ஆதரவும் இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவும் காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆகவே, இந்த காலிஸ்தான் தீவிரவாதிகள்தான், ‘ஐ லவ் பாகிஸ்தான்’ என்று அச்சிட்ட பலூன்களை வயல்வெளிகளில் பறக்க விட்டிருக்க வேண்டும் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.