பஞ்சாப்பில் கட்டாய மதமாற்றம் செய்த கிறிஸ்தவ மிஷனரி கும்பலை சீக்கியர்கள் விரட்டி அடித்ததோடு, அங்கு போடப்பட்டிருந்த சேர்களையும் அடித்து நொறுக்கினர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டம் ஜண்டியாலா குருவுக்கு அருகில் உள்ளது ததுவானா கிராமம். இங்கு நிஹாங் சீக்கியர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் கூலித் தொழில் செய்து பிழைப்பு நடத்தும் அன்றாடம் காய்ச்சிகள். எனவே, இவர்களை ஆசைவார்த்தை கூறி, மதமாற்றம் செய்ய திட்டமிட்டிருக்கிறது கிறிஸ்தவ மிஷனரி கும்பல். இதற்காக, அந்த கிராமத்தில் ஒரு இடத்தை ஒரு வருட குத்தகைக்கு எடுத்திருக்கிறார்கள். பின்னர், அப்பகுதியில் வசிக்கும் ஏழை சீக்கியர்களை வளைப்பதற்காக, கிறிஸ்தவ பெண்களை வைத்து கிராமம் முழுவதும் இயேசுவை பற்றிய துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்திருக்கிறார்கள். தொடர்ந்து, அந்த இடத்தில் பந்தல் அமைத்து, சேர்களை போட்டு பிரசார கூட்டங்களை நடத்தி இருக்கிறார்கள்.
சுமார் 6 மாதங்களுக்கும் மேலாக இவ்வாறு பிரசாரம் செய்து வந்திருக்கிறார்கள். இதுகுறித்து சீக்கியர்கள் தரப்பில் போலீஸில் புகார் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சூழலில், சம்பவத்தன்றும் கிறிஸ்தவ மிஷனரி கும்பல் பிரசார கூட்டத்தை நடத்தி இருக்கிறது. அப்போது அங்கு வந்த சீக்கியர்கள் குழு, கிறிஸ்தவ மிஷனரி கும்பலை அங்கிருந்து விரட்டி அடித்ததோடு, அங்கு போடப்பட்டிருந்த சேர்களை அடித்து உடைத்தனர். தவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்திருக்கிறார்கள். பின்னர், இரு தரப்பினரிடையேயும் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். அப்போது, சீக்கியர்கள் தரப்பில், இனி கிறிஸ்தவ மிஷனரிகள் தங்களது கிராமத்திற்குள் வரக்கூடாது என்று கறாராக கூறியிருக்கிறார்கள்.
இதையடுத்து, போலீஸ் அதிகாரிகள் கிறிஸ்தவ மிஷனரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இனிமேல் இக்கிராமத்தில் கிறிஸ்தவ நிகழ்ச்சிகள் நடைபெறாது என்று மிஷனரிகள் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரு தரப்பினரும் கலைந்து சென்றனர். இதுகுறித்து நிஹாங் சீக்கியர்கள் குழுவினர் கூறுகையில், பிரார்த்தனை நிகழ்ச்சிகள் என்கிற பெயரில் கடந்த சில மாதங்களாக கிறிஸ்தவ மிஷனரிகள் மதமாற்றம் செய்து வருகிறார்கள். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தும், போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நாங்களே வந்து மதமாற்றத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்தோம். எங்கள் உறவினர்களை மதமாற்றம் செய்யும்போது எப்படி வேடிக்கை பார்க்க முடியும். ஆகவே, பஞ்சாப்பில் உள்ள அனைத்து சீக்கிய மத குழுக்களும் ஒன்றிணைந்து இதுபோன்ற மதமாற்றத்திற்கு எதிராக போராட வேண்டும் என்றார்கள்.