ஆபாச வார்த்தைகளால் ஆளுநருக்கு அர்ச்சனை: தி.மு.க. ஆதரவாளர் மீது நடவடிக்கை எடுக்குமா போலீஸ்?

ஆபாச வார்த்தைகளால் ஆளுநருக்கு அர்ச்சனை: தி.மு.க. ஆதரவாளர் மீது நடவடிக்கை எடுக்குமா போலீஸ்?

Share it if you like it

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தரக்குறைவாக திட்டிய தி.மு.க. ஆதரவாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

ஏழை மாணவர்களின் நலனுக்காக கொண்டு வந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் போராட்டம், ஆர்ப்பாட்டம் என பல்வேறு கபட நாடகங்களை நடத்தி வருவதை தமிழக மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். மேலும், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று, தமிழக சட்டமன்றத்தில் புதிய மசோதா ஒன்றை நிறைவேற்றி, அதனை ஆளுநருக்கு அனுப்பி வைத்தது தி.மு.க. அரசு. ஆனால், உங்கள் மசோதாவை மீண்டும் மறுபரிசீலனை செய்யுங்கள் என்று கடந்த 4-ம் தேதி தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பி இருந்தார் ஆளுநர்.

இந்த நிலையில்தான், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கடுமையாகவும், ஆபாசமாகவும் விமர்சித்து தி.மு.க.வின் தீவிர ஆதரவாளர் ஒருவர் பேசியிருக்கிறார். இக்காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆகவே, ஆளுநரை தரக்குறைவாக விமர்சித்த அந்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஏற்கெனவே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மூத்த தலைவரும், பிரபல ஆபாச பேச்சாளருமான வன்னியரசு. பாரதப் பிரதமர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, அவரை கொலைகாரன் என்று நியூஸ் 18 ஊடகத்தில் சமீபத்தில் பேசி இருந்தார். இவர், மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன. ஆனால், இன்று வரை வன்னியரசு மீது தமிழக காவல்துறை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்படி, பாரதப் பிரதமர் விஷயத்தில் மெளனம் காத்த காவல்துறை ஆளுநரை விமர்சனம் செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க முன்வருமா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it