நெறியாளரிடம் பல்பு வாங்கிய ஆர்.எஸ். பாரதி!

நெறியாளரிடம் பல்பு வாங்கிய ஆர்.எஸ். பாரதி!

Share it if you like it

தி.மு.க. மூத்த தலைவர் ஆர்.எஸ். பாரதியை behindwoods ஊடக பெண் நெறியாளர் நோஸ்கட் செய்த காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழக முதல்வர் ஸ்டாலினை மாற்று திறனாளி வினோத்பாபு அண்மையில் ஏமாற்றிய சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த காணொளியை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், தி.மு.க.வின் மூத்த தலைவரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதி அண்மையில் behindwoods ஊடகத்திற்கு பேட்டியளித்திருக்கிறார்.

அந்த பேட்டியில், போலி டாக்டர்கள், போலி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், போலி ஐ.பி.எஸ் அதிகாரிகள் இருப்பதை போல, போலி வருமானவரித்துறை ( தி.மு.க. நிர்வாகிகளின் வீடுகளில் ரெய்டு ) அதிகாரிகள் ஏன் வந்திருக்க கூடாது என பெண் நெறியாளரிடம் ஆர்.எஸ். பாரதி கேள்வி ஒன்றினை முன்வைத்தார். ஆமாம், அது உண்மைதான். அண்மையில் ஒருவர் நான் ஒரு விளையாட்டு வீரர் என முதல்வர் வரை சென்று இருக்கிறார் என அந்த பெண் நெறியாளர் கூறினார். இதனை, கேட்டு ஆர்.எஸ். பாரதி கடும் அதிர்ச்சியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it