இளம் பெண்கள் இருக்கும் இடமாக சென்று தேர்தல் பிரச்சாரம் செய்கிறார் ராகுல்  காந்தி கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கிண்டல்..!

இளம் பெண்கள் இருக்கும் இடமாக சென்று தேர்தல் பிரச்சாரம் செய்கிறார் ராகுல்  காந்தி கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கிண்டல்..!

Share it if you like it

கம்யூனிஸ்ட்கள் ஆட்சி செய்யும் கேரளாவை மற்ற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும் என்று தனது கருத்தினை அவ்வபொழுது தெரிவித்து வரக்கூடியவர் சீமானின் நெருங்கிய கூட்டாளியும்., கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஆதரவாளருமான அருணன் என்பது அனைவரும் அறிந்ததே.

மேற்குவங்கம், தமிழகத்தில், கம்யூனிஸ்ட் தோழர்களுடன்., காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து கொண்டு. மிக தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்வதும். கேரளாவில் எலியும், பூனையுமாக, இருந்து கொண்டு ஒருவரை ஒருவர் மிக கடுமையாக வசை மாரி பொழிவதும் தொடர்கதையாக இன்று வரை இருந்து வருகிறது.

Tamil Nadu: Rahul Gandhi performs dance, push-ups with school students in  Kanyakumari - The Economic Times Video | ET Now

செங்கொடி இருந்தால் எவ்வளவு தங்கம் வேண்டுமானாலும் கடத்தலாம்., என்று அண்மையில் ராகுல் காந்தி கம்யூனிஸ்ட் தோழர்களின் சுயரூபத்தை தோலுரித்து காட்டி இருந்தார். மத்திய அரசு, பாஜக, மோடி, என்றால் உடனே கருத்து தெரிவிக்கும் அருணன். தோழர்களை திருடன் உடன் ஒப்பிட்டு பேசிய ராகுல் காந்தியை  கண்டிக்காமல் இன்று வரை நீண்ட மெளனம் காத்து வருகிறார்.

ஒரு கையில் தண்டால் எடுத்து அசத்திய ராகுல் காந்தி - Rahul Gandhi | UPDATE  NEWS 360 - YouTube

இந்நிலையில் கேரளாவை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ராகுல் காந்தி இளம் பெண்கள் இருக்கும் இடமாக சென்று தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் என்று கிண்டல் செய்து உள்ளார்.

கம்யூனிஸ்ட் தோழர்களை திருடனுடன் ஒப்பிட்டு பேசிய ராகுல் காந்தியை அருணன் கண்டிக்கவில்லை. இளம் பெண்கள் இருக்கும் இடமாக, சென்று தேர்தல் பிரச்சாரம் செய்கிறார் ராகுல் காந்தி. என்று கிண்டல் செய்த கம்யூனிஸ்ட் தோழரை. கே.எஸ்.  அழகிரி கண்டிக்கவில்லை. இது அல்லவா கட்சி, இது அல்லவா கொள்கை என்று  அருணனையும், அழகிரியையும், என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


Share it if you like it