தமிழர்களாய் ஒருங்கிணைவோம்! தளபதி தலைமையில் இந்தியாவை வென்றெடுப்போம் என்ற தலைப்பில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவருமான பீட்டர் அல்ஃபோன்ஸ் அவர்கள் அண்மையில் முரசொலியில் ஒரு முழுப்பக்க கட்டுரை எழுதி இருந்தார். அதில் அவர் கூறியதாவது.
- தாங்கள் தரமான ஹிந்துக்கள் என்று காண்பிப்பதற்கு ‘அவர்கள்’ (காங்கிரஸ்) எடுத்துக்கொண்ட முயற்சிகளால் அவர்களது இயற்கையான வாக்காளர்களிடம் இருந்தும் அந்நியமாகி விட்டனர். ராகுல் காந்தியை “பூணூல் தரித்த பிராமணர்” என்று அடையாளப்படுத்தியதை கண்டு காங்கிரஸ்காரர்களில் பலர்
- நெஞ்சுக்குள் அழுததை நான் அறிவேன் (நான் உட்பட). மொத்தத்தில் பா.ஜ.க விரித்த வலையில் காங்கிரஸ் விழுந்து விட்டது என்றே சொல்ல வேண்டும். அந்த குழப்பம் இன்னும் தொடர்வதாகவே நான் கருதுகிறேன். உத்தரகாண்ட் தேர்தலில் பாஜக பிரச்சாரம் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று இருந்தால், காங்கிரஸ்
- பிரச்சாரம் ‘ஜெய் கணேஷ்’ ஆக இருக்கும் என்று அறிவித்திருப்பதை சரியான தேர்தல் யுக்தியா?” என்று திரு. பீட்டர் அல்ஃபோன்ஸ் காங்கிரஸ் கட்சிக்கு கேள்வி எழுப்புவது போல் அந்த கட்டுரை அமைந்து இருந்தது.
இந்நிலையில் இன்று ஜம்மு-வில் நடந்த பொது கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட ராகுல் காந்தி இவ்வாறு பேசியிருந்தார்.
நான் வைஷ்ணவி தேவியிடம் பிரார்த்தனை செய்ய வந்துள்ளேன். நான் இங்கு எந்த அரசியல் கருத்துக்களையும் கூற விரும்பவில்லை. நான் ஒரு காஷ்மீர் பண்டிட். என் குடும்பம் காஷ்மீர் பண்டிட் குடும்பம் என்று அக்கூட்டத்தில் பேசியுள்ளார்.
தன்னை ஒரு ஹிந்து என்று ராகுல் காந்தி அடையாளப்படுத்தி கொண்டதை கூட தாங்கி கொள்ள முடியாமல் பீட்டர் அல்ஃபோன்ஸ் உட்பட பல காங்கிரஸ்காரர்கள் கண்ணீர் விட்டார்கள் என்றால் மீண்டும் தன்னை ஒரு (காஷ்மீர் பண்டிட்) ஹிந்து என்று ராகுல் காந்தி பேசியிருப்பது நிச்சயம் பீட்டர் அல்ஃபோன்ஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை மீண்டும் கண்ணீர் சிந்த வைத்திருக்கும். காங்கிரஸ் வேட்டி வெகு விரைவில் தி.மு.க வேட்டியாக மாறும் என்று நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.