ஒழுங்கீனமாக நடந்து கொண்ட 12 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவையில் பங்கு பெற தடை
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடர் தற்பொழுது நடைபெற்று வருகிறது. மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டி இடத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் சிலர் தேவையில்லாமல் ஆர்ப்பாட்டம், கோஷம், என்று அவையின் பொன்னான நேரத்தை வீணாக்கி வருவதை தொடர்ந்து 12 எம்பிகள் அவை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டது.
ஆளும் பா.ஜ.க அரசு மீது குற்றச்சாட்டு சுமத்த எந்த காரணமும் கிடைக்காத எதிர்க்கட்சிகளுக்கு 12 எம்பிகளின் தடையை ஒரு காரணமாக கொண்டு அவையில் குழப்பத்தை இன்று வரை ஏற்படுத்தி வருகின்றனர். இதுபோன்று இனிமேல் நடந்து கொள்ள மாட்டேன் என்று 12 எம்பிகளும் மன்னிப்பு கேட்டால் அவை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவர்களுக்கு தடையில்லை என்று கூறிய பின்பும் கூட மன்னிப்பு கேட்காமல் காந்தி சிலை முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் போராடி வரும் எம்பிகளுக்கு தனது ஆதரவினை தெரிவிக்கும் விதமாக சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து உள்ளார் அப்பொழுது தான் இந்த கூத்து அரங்கேறியுள்ளது.
ராகுல் காந்தி ; எத்தனை எம்பிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்கள்?,எத்தனை நாட்கள் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்கள்? என்று அருகில் இருக்கும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி MP- யிடம் கேட்கிறார்.
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ; 2 வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்று பதில்.
சரியா கேட்டு சொல்லுங்க என எதுவும் தெரியாத மல்லிகார்ச்சுன் கர்கெ MP அவர்கள் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு உத்தரவு போடுகிறார்.
மாணவி ; ராஜீவ் காந்தி குறித்து கேள்வி?
ராகுல் காந்தி ; நிச்சயமாக, என் தந்தையை இழந்துவிட்டேன் அது எனக்கு ஒரு கடினமான நேரம்..
ராகுல் காந்தி ; உங்களுக்கு தந்தை இருக்கிறாரா?
மாணவி ; இருக்கிறார்…
ராகுல் காந்தி ; அவர் உயிருடன் இருக்கிறார்..
“இங்குள்ள பல பெண்கள் தங்கள் தந்தையை இழந்து இருப்பார்கள் என்று நம்புகிறேன்”