நாய் பிஸ்கட்டை தொண்டருக்கு கொடுத்த ராகுல் காந்தி – விளாசும் நெட்டிசன்கள் !

நாய் பிஸ்கட்டை தொண்டருக்கு கொடுத்த ராகுல் காந்தி – விளாசும் நெட்டிசன்கள் !

Share it if you like it

பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் ராகுல் காந்தி நாய் பிஸ்கட்டை கட்சி தொண்டருக்கு வழங்கியதாக பாஜக வீடியோ வெளியிட்டு கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இந்த வீடியோ தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது.

வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி ராகுல் காந்தி பாரத் ஜோடோ நியாய யாத்திரையை மணிப்பூரில் தொடங்கி உள்ளார். இந்த யாத்திரை மார்ச் மாதம் 20ம் தேதி மும்பையில் முடிவடைய உள்ளது.

இந்நிலையில் தான் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை என்பது அடிக்கடி விவாதத்தை கிளப்பி வருகிறது. மணிப்பூர், மேற்கு வங்க மாநிலத்தில் யாத்திரைக்கு அனுமதி கொடுக்க மறுத்தது, அசாமில் ரூட்டை மாற்றி பயணித்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது, ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது, ராகுல் காந்தியின் கார் கண்ணாடி உடைந்தது உள்ளிட்ட விஷயங்களால் தொடர்ந்து இந்த யாத்திரை என்பது பேசும் பொருளாகவே இருந்து வருகிறது.

அந்த வரிசையில் தற்போது ராகுல் காந்தி புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளார். அதாவது ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை என்பது ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்து வருகிறது. ராஞ்சியில் நடந்த யாத்திரையின்போது ராகுல் காந்தி காரின் மேற்புறத்தில் அமர்ந்திருந்தார். அவர் அருகே குட்டி நாய் ஒன்றும் இருந்தது. ராகுல் அந்த நாய்க்கு பிஸ்கட் வழங்கினார். இதுதொடர்பான வீடியோ என்பது இணையதளங்களில் வெளியானது.

இந்நிலையில் தான் அந்த வீடியோவை பாஜகவின் ஐடி விங்க் பொறுப்பாளர் அமித் மாளவியா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‛‛சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கட்சியின் பூத் ஏஜென்ட்டுகளை நாயுடன் ஒப்பிட்டு பேசினார். இப்போது ராகுல் காந்தி நாய்க்கு உணவாக பிஸ்கட் வழங்கினார். அதனை நாய் சாப்பிட மறுத்த நிலையில் அந்த பிஸ்கட்டை அவர் கட்சி தொண்டருக்கு வழங்கி உள்ளார். இப்படி கட்சியின் தலைவர் மற்றும் பட்டத்து இளவரசர் கட்சியினரை நாய் போல் நடத்தினால் விரைவில் அந்த கட்சி மாயமாகிவிடும்” என தெரிவித்துள்ளார்.


Share it if you like it