முனைவர் கு.வை. பா அவர்களின் சிறப்பு வானிலை அறிக்க, 20.11.2023, காலை 0945 மணி
கடந்த இரண்டு நாட்களாக தமிழக கடளொர மாவட்டங்களில் கனமழை பற்றிய முன்னெச்சரிக்கை கொடுத்தும் எதிர்பார்த்த அளவிற்கு மழை பெய்யவில்லை. டெல்டா மாவட்டங்கள். தென் தமிழகத்தில் மட்டு மழை பெய்தது.
தற்போதைய நிலவரப்படி குமரிக்கடல் பகுதியில் ஒரு காற்றுச் சுழற்சி தரைநிலையில் இருந்து 1.5 கிலோமீட்டர் உயரம் வரை நிலவுகிறது. தமிழகக் கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வு நிலை காணப்படுகிறது. இலங்கையின் கிழக்குக் கடலோரத்தில் ஒரு காற்று சுழற்சி காணப்படுகிறது.
இதன் காரணமாக சென்னை உட்பட தமிழகக் கட்லோர மாவட்டங்களில் இன்று பரவலாக லேசான முதல் மிதமான மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கன மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் 19-11-2023 காலை 0830 மணி முதல் 20-11-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி) 16;
சாத்தான்குளம் (தூத்துக்குடி) 12;
திருச்செந்தூர் (தூத்துக்குடி) 11;
காயல்பட்டினம் (தூத்துக்குடி), ஊத்து (திருநெல்வேலி) தலா 9;
சாத்தான்குளம் ARG (தூத்துக்குடி), காக்காச்சி, மாஞ்சோலை (திருநெல்வேலி) தலா 8;
திருச்செந்தூர் AWS (தூத்துக்குடி), கொடுமுடியாறு அணை, இராதாபுரம், நாலுமுக்கு (திருநெல்வேலி), கடலாடி (இராமநாதபுரம்) தலா 7;
களக்காடு, நாங்குநேரி (திருநெல்வேலி), ஓட்டப்பிடாரம் (தூத்துக்குடி) தலா 6;
மூலைக்கரைப்பட்டி, பாளையங்கோட்டை (திருநெல்வேலி), இராமேஸ்வரம், வாலிநோக்கம், தங்கச்சிமடம் (இராமநாதபுரம்), சூரங்குடி, மணியாச்சி (தூத்துக்குடி) தலா 5;
சேரன்மகாதேவி, நம்பியார் அணை, கந்னடியான் அணைக்கட்டு (திருநெல்வேலி), முதுகுளத்தூர் (இராமநாதபுரம்), பழைய தாலுகா அலுவலகம் ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி) தலா 4;
மணிமுத்தாறு, அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), வைப்பார், விளாத்திகுளம், வேடநத்தம், கீழஅரசடி (தூத்துக்குடி), கன்னியாகுமரி, முள்ளங்கினாவிளை, கொட்டாரம், மயிலாடி (கன்னியாகுமரி), இராமநாதபுரம், பாம்பன், மண்டபம் (இராமநாதபுரம்) தலா 3;
பூந்தமல்லி ARG (திருவள்ளூர்), மண்டலம் 08 மலர் காலனி (சென்னை), கோடியக்கரை (நாகப்பட்டினம்), பாபநாசம் (திருநெல்வேலி), திருப்பதிசாரம் AWS, நாகர்கோவில், தக்கலை, பெருஞ்சாணி அணை, புத்தன் அணை, சிவலோகம் (சித்தார் II), ஆனைக்கிடங்கு, குருந்தன்கோடு, மாம்பழத்துறையாறு, ஆரல்வாய்மொழி, சித்தார்-I, முக்கடல் அணை (கன்னியாகுமரி) தலா 2;
பொன்னேரி (திருவள்ளூர்), மண்டலம் 2 டி 156 முகலிவாக்கம், அம்பத்தூர், எம்ஜிஆர் நகர் (சென்னை), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), ராமநதி அணைப் பிரிவு, கடனா அணை (தென்காசி), திருநெல்வேலி, சேர்வலார் அணை (திருநெல்வேலி), ராம்நாடு KVK AWS, கமுதி ARG, கமுதி (இராமநாதபுரம்), கடம்பூர், காடல்குடி, கயத்தாறு, எட்டயபுரம் (தூத்துக்குடி), பாலமோர், பேச்சிப்பாறை, திற்பரப்பு, களியல், கோழிப்போர்விளை, பூதப்பாண்டி, குழித்துறை, சூரலக்கோடு, கன்னிமார், அடையாமடை (கன்னியாகுமரி) தலா 1.