பழமையான சிவன் கோயில் இடிப்பு… மூடி மறைத்த தமிழக மீடியாக்கள்!

பழமையான சிவன் கோயில் இடிப்பு… மூடி மறைத்த தமிழக மீடியாக்கள்!

Share it if you like it

300 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலையும், 150-க்கும் மேற்பட்ட வீடுகளையும் இடித்துத் தள்ளி இருக்கிறது ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு. ஆனால், இதை தமிழகத்திலுள்ள மீடியாக்கள் மூடி மறைத்து விட்டன.

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் ராஜ்கர் தொகுதிக்கு உட்பட்ட சராய் மொகல்லா என்ற இடத்தில் அமைந்திருக்கிறது 300 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில். இப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட கடைகளும் இருக்கின்றன. இந்த நிலையில், சாலையை அகலப்படுத்தவிருப்பதாகக் கூறி, மேற்கண்ட சிவன் கோயிலையும், 150-க்கும் மேற்பட்ட கடைகளையும் இடித்துத் தள்ளி இருக்கிறது அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு. புல்டோசரைக் கொண்டு கோயிலின் மேற்கூரை மற்றும் தூண்கள் இடிக்கப்பட்டிருக்கிறது. இதில் கோயில் சிலைகள் சேதமடைந்தன. மேலும், கோயிலுக்குள் இருந்த சிவலிங்கம் டிரில் மூலம் பிடுங்கப்பட்டிருக்கிறது. இதற்கு லோக்கல் வியாபாரிகளும், பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

இதனிடையே, லோக்கல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜவ்ஹாரி லால் மீனா பேசிய வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, இந்தப் பகுதியில் காங்கிரஸ் பெயர் பலகை இருந்திருந்தால் இந்தக் கோயிலும், வீடுகளும், கடைகளும் இடிக்கப்பட்டிருக்காது என்று அவர் கூறுகிறார். ஆனால், அப்பகுதியில் பா.ஜ.க. பெயர் பலகை இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், மக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக, கோயில் இடிப்பதை தடுக்க தனது வீட்டுக்கு 34 கவுன்சிலர்களை வரச்சொன்னதாக அள்ளி விடுகிறார். ஆனால், இதை மக்கள் நம்பவில்லை என்பது வேறு கதை. காரணம், அறிவிப்பே கொடுக்காமல் வீடுகள் மற்றும் கடைகளை அரசாங்கம் இடித்ததாகவும், தங்களுடைய சொத்துக்களின் சரியான ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாகவும் லோக்கல் மக்கள் கூறுகிறார்கள். இதையும் மீறி நகராட்சி நிர்வாகம் கட்டடங்களை இடித்திருக்கிறது. இது தொடர்பாக, கோயில் பூசாரி மற்றும் பிரஜ்பூமி விகாஸ் பரிஷத் சார்பில் லோக்கல் எம்.எல்.ஏ. ஜோஹ்ரி லால் மீனா மற்றும் நகராட்சி நிர்வாக அதிகாரி உட்பட 3 பேர் மீது போலீஸில் புகார் செய்யப்பட்டிருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, இச்சம்பவம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் மாநில பா.ஜ.க. தலைவர் அமித் மாளவியா, “ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் வளர்ச்சி என்ற பெயரில் 300 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் இடிக்கப்பட்டிருப்பது ஹிந்துக்களின் மனதை புண்படுத்தி இருக்கிறது. கரௌலி மற்றும் ஜஹாங்கிர்புரியில் கண்ணீர் சிந்துவதும், இந்துக்களின் நம்பிக்கையைப் புண்படுத்துவதும்தான் காங்கிரஸின் மதச்சார்பின்மை” என்று குறிப்பிட்டிருக்கிறார். டெல்லி ஜஹாங்கிர்புரியில் இஸ்லாமியர்களின் வீடு, கடைகளை இடித்தபோது, அய்யகோ இது நியாயமா என்று கேள்வி கேட்டு, பட்டிமன்றம் நடத்தாக குறையாக போட்டி போட்டு செய்திகளை ஒளிபரப்பின தமிழக ஊடகங்கள். அதேபோல மதச்சார்பின்மை பேசும் போலி போராளிகளும் நீலிக் கண்ணீர் வடித்தனர்.

ஆனால், தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் 300 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் இடிக்கப்பட்டதையும், 150-க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் வீடு இடிக்கப்பட்டதையும் பற்றி எந்த தமிழக ஊடகங்களும் செய்தி வெளியிடவில்லை. அதேபோல, போலி போராளிகளும் போராட்டத்தில் குதிக்கவில்லை. ஆகவே, இதுதான் உங்கள் மதச்சார்பின்மையா என்று கேள்வி எழுப்புகிறார்கள் தேசநல விரும்பிகள்.

கடந்த 3 ஆண்டுகளாக பல மறைக்கப்பட்ட வரலாறுகள், சொல்லப்படாத உண்மை செய்திகள் உங்களிடம் கொண்டு வந்து சேர்த்ததில் மீடியான் பெருமை கொள்கிறது. இப்பணி சிறப்பாக, தரமாக தொடர உங்கள் ஆதரவு அவசியம். மீடியான் குடும்பத்தின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு கரம் சேர்ப்போம்.


Share it if you like it