ஹிந்து கடவுள்களை இழிவுபடுத்திய அஜ்மீர் தர்கா நிர்வாகி!

ஹிந்து கடவுள்களை இழிவுபடுத்திய அஜ்மீர் தர்கா நிர்வாகி!

Share it if you like it

அஜ்மீர் தர்கா நிர்வாகி ஒருவர் ஹிந்து கடவுள்களை இழிவுபடுத்தி பேசியிருக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னாள் தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா, தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இதே நிகழ்ச்சியில் பங்கேற்ற இஸ்லாமிய அடிப்படைவாதியான தஸ்லிம் அகமது ரெஹ்மானி என்பவர், சிவலிங்கத்தைப் பற்றி இழிவாகப் பேசினார். நுபுர் ஷர்மா எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் தொடர்ந்து ஹிந்து கடவுளை இழிவுபடுத்தி பேசியபடி இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த நுபுர் ஷர்மா, இஸ்லாமிய மதப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் முகமது நபி பற்றிய கருத்தை சுட்டிக்காட்டிப் பேசினார். இதை ஆஸ்ட் நியூஸ் இணை இயக்குனர் முகமது சுபைர் போன்ற இஸ்லாமிய அடிப்படைவாதிகள் எடிட் செய்து, சமூக வலைத்தளங்களில் பரப்பி, இஸ்லாமியர்களிடையே வெறுப்பை உண்டாக்கினர். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், நுபுர் ஷர்மா கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

எனினும், நுபுர் ஷர்மாவை கைது செய்யக் கோரி, இஸ்லாமிய அடிப்படைவாதிகள் போராட்டம், வன்முறை, கலவரம் போன்ற அத்துமீறல்களில் ஈடுபட்டனர். குறிப்பாக, உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் ஜூன் 3-ம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் தொழுகை முடிந்து திரும்பிய அடிப்படைவாதிகள், பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்ட ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த டெய்லர் கன்ஹையா லால், இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு அம்மாநிலத்திலுள்ள அஜ்மீர் தர்காவின் காதிம்கள்தான் காரணம் என்பது தெரியவந்தது. அதாவது, அஜ்மீர் தர்காவின் காதிம்களில் ஒருவரான சல்மான் சிஷ்டி, நுபுர் ஷர்மாவின் தலையை கொய்து வருபவர்களுக்கு தனது வீட்டையும், சொத்தையும் எழுதி வைப்பதாகக் கூறி வீடியோ வெளியிட்டார். மற்றொரு காதிமான கௌஹர் சிஷ்டி, கன்ஹையா லாலை கொலை செய்வதற்கு முன்பு, கொலையாளிகளில் ஒருவரான ரியாஸ் அட்டாரியை சந்தித்திருக்கிறார். இன்னொரு காதிமான சர்வார் சிஷ்டி, ஹிந்துஸ்தானை அதிரவைக்குப்படி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்று கூறி மிரட்டல் விடுத்ததோடு, ஹிந்துக்களின் கடைகளில் பொருட்கள் வாங்குவதை இஸ்லாமியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் ஆடியோ வெளியிட்டார்.

இந்த நிலையில்தான், சர்வார் சிஷ்டியின் மகன் சையது ஆதில் சிஷ்டி, ஹிந்து கடவுள்களை இழிவாக பேசி வெளியிட்டிருக்கும் வீடியோ, ஹிந்துக்களிடையே மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வீடியோவில், “ஹிந்துக்களுக்கு 333 கோடி கடவுள்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்ததாகக் கூறுகிறார்கள். இதெல்லாம் நம்பும்படியாகவா இருக்கிறது. அதேபோல, விஷ்ணு 10 அவதாரம் எடுத்ததாகச் சொல்கிறார்கள். இதில் சில விலங்கு அவதாரங்கள். அப்படி இருக்க, விலங்குக்கும் மனிதனுக்கும் எப்படி குழந்தை பிறக்கும். மேலும், ஹனுமன், விநாயகர் போன்றவை விலங்குகள். ஆகவே, விலங்குகள் எப்படி கடவுளாக முடியும்” என்பன உட்பட பல்வேறு கேள்விகளை எழுப்பி, இதற்கெல்லாம் ஹிந்துக்களால் பதில் சொல்ல முடியுமா? என்று கேட்டு, இழிவுபடுத்தி இருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ஹிந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it