நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக வீடியோ: கழுத்தை அறுத்து ஹிந்து டெய்லர் படுகொலை!

நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக வீடியோ: கழுத்தை அறுத்து ஹிந்து டெய்லர் படுகொலை!

Share it if you like it

ராஜஸ்தானில் நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக வீடியோ பதிவு வெளியிட்ட டெய்லர், இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடத்த தேசிய புலனாய்வு முகமையின் (என்.ஐ.ஏ.) தனிப்படை ராஜஸ்தான் மாநிலத்துக்கு விரைந்திருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்தவர் கன்னையா லால். இவர், தன்மண்டி பகுதியில் தையல் கடை நடத்தி வந்தார். இவரைத்தான் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கழுத்தை அறுத்து படுகொலை செய்திருக்கிறார்கள். ஏனெனில், கன்னையா லால் சமீபத்தில் ஒரு வீடியோ பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். அதாவது, சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்று விவாத நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. இதில், பங்கேற்ற தஸ்லிம் தெஹ்ரான் என்கிற இஸ்லாமிய அடிப்படைவாதி, சிவபெருமானை பற்றி அவதூறாகப் பேசினார். இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.க.வைச் சேர்ந்த நுபுர் ஷர்மா, இஸ்லாமிய மதப் புத்தகத்தில் முகமது நபி குறித்து இடம்பெற்றிருந்த ஒரு கருத்தை சுட்டிக்காட்டினார்.

ஆனால், Alt நியூஸ் இயக்குனர்களில் ஒருவரான முகமது ஜுபைர் உள்ளிட்ட இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தெஹ்ரான் பேசியதை கட் செய்து விட்டு, நுபுர் ஷர்மா பேசியதை மட்டும் எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் வைரலாக்கினர். இதனால் இஸ்லாமிய சமூகத்தினர் ஆத்திரமடைந்தனர். மேலும், இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களையும் டேக் செய்திருந்ததால், இஸ்லாமிய நாடுகளும் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து, நுபுர் ஷர்மாவும், அவருக்கு ஆதரவாக பதிவிட்ட நவீன் ஜிண்டாலும் பா.ஜ.க.விலிருந்து நீக்கப்பட்டனர். ஆனால், ஹிந்து அமைப்புகளும், ஹிந்துக்களும் நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக கருத்துகளை பதிவு செய்து வந்தனர். மேலும், நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவு தெரிவித்து பிரமாண்ட பேரணியையும் நடத்தினர்.

இந்த நிலையில், கன்னையா லாலும் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டிருந்தார். இதனால், போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த சூழலில், நேற்று காலை அவரது கடைக்கு வந்த 2 இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தைக்க துணி கொடுப்பதுபோல நடித்தனர். இதை நம்பிய கன்னையா லாலும் அளவெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கன்னையா லாலின் கழுத்தை அறுத்து படுகொலை செய்தனர். மேலும், இதனை வீடியோ எடுத்தும் வெளியிட்டனர்.

இச்சம்பவம்தான் ராஜஸ்தான் மாநிலம் மட்டுமல்லாது நாடுமுழவதும் கடும் அதிர்ச்சியையும், பெரும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி இருக்கிறது. கன்னையா லால் கொலையை கண்டித்து, ராஜஸ்தான் மாநிலம் முழுவதுமே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல பகுதிகளில் போராட்டக்காரர்கள் கடைகள், வீடுகள், வாகனங்களுக்கு தீவைத்தனர். இதனால் மாநிலத்தில் பெரும் பதற்றமான சூழல் உருவாகி இருக்கிறது. அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக ராஜஸ்தான் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மேலும், பதற்றம் நிறைந்த பகுதிகளில் ஆயிரக்கணக்கான போலீஸாரும், துணை ராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனிடையே, கன்னையா லாலை கொலை செய்ததாக 2 பேரை ராஜஸ்தான் போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து, கன்னையா லால் கொல்லப்பட்ட விதம், ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை செய்யும் பாணியை ஒத்திருப்பதாக உளவுத்துறை தெரிவித்திருக்கிறது. ஆகவே, கன்னையா லால் கொலை தீவிரவாத தாக்குதலா என்பது குறித்து விசாரிப்பதற்காக தேசிய புலனாய்வு முகமையின் (என்.ஐ.ஏ.) தனிப்படை உதய்பூர் விரைந்திருக்கிறது.


Share it if you like it