ராம் சேது பாலம் உண்மையா? களத்தில் குதித்த இஸ்ரோ… ஹிந்துக்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி!

ராம் சேது பாலம் உண்மையா? களத்தில் குதித்த இஸ்ரோ… ஹிந்துக்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி!

Share it if you like it

ராம் சேது என்று அழைக்கப்படும் ராமர் பாலம் மனிதர்களால் கட்டப்பட்டதா அல்லது இயற்கையாக உருவான மணல் திட்டா என்பது குறித்த உண்மையைக் கண்டறிய இஸ்ரோ நேரடியாக களமிறங்கி இருக்கிறது.

பாரதத்தின் தென்கோடியில் இருக்கும் தனுஷ்கோடியையும், இலங்கையின் தலைமன்னாரையும் இணைக்கும் வகையில் அமைந்திருக்கிறது ராம் சேது பாலம். பகவான் ராமரின் மனைவியான சீதாதேவியை, இலங்கை மன்னன் ராவணன் கவர்ந்து சென்றான். அப்போது, சீதையை மீட்பதற்கு ராமருக்கு உதவும் வகையில், வானர சேனைகளால் கட்டப்பட்டது ராம் சேது பாலம். இதை இராமாயணம் மிகத் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறது. இதை ஹிந்துக்கள் ஆழமாக நம்பி வருகின்றனர். ஆனால், இராமாயணம் ஒரு கட்டுக்கதை என்றும், மேற்கண்ட பாலம் இயற்கையாக உருவான மணல் திட்டு என்றும் இடதுசாரிகள் கூறிவருகின்றனர். இதனால், ராம் சேது பாலம் மனிதனால் கட்டப்பட்டதா அல்லது இயற்கையாக உருவான மணல் திட்டா என்கிற சந்தேகம் நிலவி வருகிறது.

இந்த நிலையில்தான், ராம் சேது பாலம் குறித்த உண்மையைக் கண்டறிய இஸ்ரோ களமிறங்கி இருக்கிறு. இதற்காக இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலுடன், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட இருப்பதை இஸ்ரோ தலைவரான எஸ்.சோம்நாத் உறுதிப்படுத்தி இருக்கிறார். இந்த ஒப்பந்தத்தின் கீழ், ராமர் பாலம் மட்டுமல்லாது வேறு சில முக்கிய தொல்பொருள் தளங்களையும் இஸ்ரோ அடையாளம் காணவிருக்கிறது. எனினும், இவற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவது ராமர் பாலம்தான். ஏனெனில், இதன் பின்னால் இருப்பது வெறும் மர்மம் மட்டுமல்ல, பல்லாயிரக் கணக்காண மக்களின் நம்பிக்கையும் கூட!

இது தொடர்பாக, இந்தியா டுடே பத்திரிகைக்கு பேட்டியளித்த இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத், “ஹை ரெசல்யூஷன் படங்கள் மற்றும் செயற்கைக்கோள் படங்கள் மூலம் புராண நதியான சரஸ்வதியின் வறண்ட கால்வாயை கண்டுபிடிக்க முடிந்தது. அதேபோல, ஆடம்ஸ் பிரிட்ஜ் என்று அழைக்கப்படும் ராமர் பாலத்தை செயற்கைக்கோள் படங்கள் வழியாக தெளிவாகப் பார்க்க முடியும். ஆனால், அந்த பாலம் மனிதர்களால் உருவாக்கப்பட்டதா அல்லது இயற்கையாகவே உருவானதா? என்கிற கேள்விக்கான துல்லியமான பதில் இல்லை. ஆகவே, அந்த உண்மையை கண்டுபிடிக்க இந்திய தொல்பொருள் ஆய்வு மற்றும் பிற துறைகளில் உள்ள வல்லுநர்ககளின் உதவி தேவைப்படுகிறது” என்று கூறியிருக்கிறார்.

எனவே, ராமர் பாலத்தின் உண்மை பின்னணியை இஸ்ரோ கண்டுபிடிக்க இருக்கிறது. இது மட்டும் மனிதர்களால் கட்டப்பட்ட பாலம்தான் என்பது நிரூபணமானால், கோடான கோடி ஹிந்துக்களின் இதயங்களில் பால் வார்த்தது போல இருக்கும்.


Share it if you like it