உடலுக்கு உரமூட்டி ஆரோக்கியம் தரும் ரத சப்தமி  !

உடலுக்கு உரமூட்டி ஆரோக்கியம் தரும் ரத சப்தமி !

Share it if you like it

திதிகளில் ஏழாவது திதியாக வருவது சப்தமி. அதிலும் தை-மாசி மாதங்களில் வளர்பிறையில் வரக் கூடிய சப்தமி மிகவும் விசேஷமானதாகும். இதை ரத சப்தமி என்கிறோம். அதாவது சூரிய பகவான் தன்னுடைய ரதத்தை வட கிழக்கு திசையில் திருப்பக் கூடிய நாள் ரத சப்தமி ஆகும். இது சூரிய பகவானை வழிபட வேண்டிய மிக முக்கியமான நாளாகும். உலகில் உள்ள அனைத்து உயிர்களும் இயங்குவதற்கு தேவையான அனைத்து ஆற்றல்களையும் வழங்கக் கூடியவர் சூரிய பகவான். ஒவ்வொரு ஆன்மாவுடனும் தொடர்புடைய இவர் தான் ஜீவாத்மாவை, பரமாத்வாவுடன் இணையக் செய்து, இறுதியாக மோட்சத்தை வழங்கக் கூடியவர். ரத சப்தமி என்பது மகாபாரதத்தில் பீஷ்மருடன் தொடர்புடைய நாள் ஆகும்.

மேலும், இந்த நாள் சூரியக் கடவுளின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. சூரியன் தெற்கு நோக்கிய தட்சிணாயனம் பயணத்தை முடித்துக்கொண்டு ரத சப்தமியன்று வடக்கு நோக்கி உத்தராயணம் பயணப்படும் தினமே ரத சப்தமி ஆகும். இது பருவங்களின் அடிப்படையில், வசந்த காலத்தின் ஆரம்பமாகவும், அறுவடை காலத்தின் தொடக்கமாகவும் உள்ளது. இந்திய விவசாயிகளூக்கு இந்த நாள் ஒரு புதிய ஆண்டின் தொடக்கமாக உள்ளது. இந்து சமய குடும்பங்களிலும், சூரியக் கடவுள் உள்ள கோவில்களிலும் ரத சப்தமி மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

சூரிய வழிபாடு இந்து மதத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது மற்றும் அதன் பழமை சீனா, எகிப்து மற்றும் மெசப்படோமியா போன்ற உலகின் பல பகுதிகளில் புராணங்களுடன் தொடர்புடையது. காயத்ரி மந்திரம் என்பது சூரியக் கடவுள் மீது இந்துக்களால் ஒவ்வொரு நாளும் மிகுந்த பயபக்தியுடன் ஓதப்படும் மந்திரம் ஆகும். புராண இந்து மதம் உருவான போது, சூரிய வழிபாடு தோன்றியதாக கருதப்படுகிறது.

ரத சப்தமி என்பது, சூரிய தேவன் (இந்து சமயம்) ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தை வடக்கு நோக்கி, குறிப்பாக வடகிழக்கு திசையில் திருப்பி பயணிக்கும் நாளாகும். சூரிய தேவனின் தேரோட்டியாக அருணன் உள்ளார். சூரியனின் தேரில் உள்ள ஏழு குதிரைகள் ஏழு வண்ணங்களைக் கொண்ட வானவில் ஐ குறிப்பதாகும். மற்றும் ஏழு குதிரைகள் வாரத்தின் ஏழு நாட்களைக் குறிப்பதாகவும் கருத்து நிலவுகிறது. அதாவது சூரியனுக்கு உகந்த தினமான ஞாயிற்றுக் கிழமை முதல் சனிக்கிழமை வரையிலான ஏழு நாட்களைக் குறிக்கிறது. மேலும், ரதத்தில் உள்ள 12 சக்கரங்கள் பன்னிரெண்டு ராசிகளைக் குறிக்கின்றன. சூரியனின் சொந்த வீடாக சிம்ம ராசி உள்ளது. சூரியன் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு ராசியில் பயணித்து திரும்பி வருவதற்கு ஒரு வருடம் ஆகிறது. ரத சப்தமி திருவிழா சூரிய கடவுளிடமிருந்து ஆற்றலையும் ஒளியையும் பெறும் விழாவாக உள்ளது.[3]

ரத சப்தமி அன்று முதல் தென்னிந்திய பகுதிகளில் வெயிலின் தாக்கம் படிப்படியாக உயர்வதை உணர முடியும். மேலும் இந்த நாள் வசந்த காலத்தின் ஆரம்பம், அதைத்தொடர்ந்து வரும் தெலுங்கு வருடப்பிறப்பு உகாதி, மற்றும் சித்திரை வருடப்பிறப்பு போன்ற பண்டிகை நாட்களை மக்கள் எதிர்பார்க்கும் விதமாக உள்ளது.

திருப்பதி திருமலையில் ரதசப்தமி அன்று ஒரு நாள் பிரம்மோற்சவம் நடைபெறும்.[6] ரத சப்தமி அன்று திருமலையில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் ஏழு வாகனங்களில் நான்கு மாட வீதிகளில் பவனி வருவார். அதனால் அன்றைய தினம் “சிறிய பிரம்மோற்சவம்” என்று அழைக்கப்படுகிறது.

ரத சப்தமியன்று விடியற்காலை 5.30 மணியளவில், சூரிய பிரப வாகனத்திலும், அதைத் தொடர்ந்து சின்ன ஆதிசேஷன் வாகனம் காலை 9 மணியளவிலும், கருட வாகனம் 11 மணியளவிலும், அனுமன் வாகனம் பிற்பகல் 1 மணியளவிலும், சக்கரஸ்நானம் பிற்பகல் 2 மணியளவிலும், கற்பகம் (மரம்) வாகனம் மாலை 4 மணியளவிலும், சர்வ பூபால வாகனம் மாலை 6 மணியளவிலும் திருமாட வீதிகளில் ஊர்வலம் நடைபெறுகின்றன. அன்று இரவு 8 மணியளவில் சந்திர பிரப வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி வருவதுடன் பிரம்மோற்சவ நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. திருப்பதி வெங்கடேசுவர சுவாமி ஒவ்வொரு வாகனத்திலும் ஒருமணி நேரத்திற்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

சூரியன் தெற்கு நோக்கிய தட்சிணாயனம் பயணத்தை முடித்துக்கொண்டு ரத சப்தமியன்று வடக்கு நோக்கி உத்தராயணம் பயணப்படும்.


Share it if you like it