என்.சி., டி.எம்.சி. ‘அவுட்’… ஆம் ஆத்மி ‘இன்’..!

என்.சி., டி.எம்.சி. ‘அவுட்’… ஆம் ஆத்மி ‘இன்’..!

Share it if you like it

தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற கட்சிகள் பட்டியலில் இருந்து மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் நீக்கப்பட்டிருக்கின்றன.

தமிழகத்தை பொறுத்தவரை, தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜ.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த சூழலில், அங்கீகாரம் பெற்ற தேசிய கட்சிகளின் பட்டியலை தேர்தல் ஆணையம் அண்மையில் வெளியிட்டது. இந்த உத்தரவால் தமிழகத்திலும் அங்கீகாரம் பெற்ற கட்சிகளின் பட்டியலில் இருந்து சில கட்சிகளை மாநில தேர்தல் ஆணையம் நீக்கி இருக்கிறது. அதன்படி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேசிய மற்றும் மாநில பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றன.

அதேசமயம், தேசிய கட்சி அந்தஸ்தை பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி, அங்கீகாரம் பெற்ற கட்சிகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கான தலைமை அலுவலகம் உள்ளிட்ட விவரங்களை மாநிலத் தேர்தல் துறை கோரியிருக்கிறது. அதேபோல, தேசியக் கட்சிக்கான அந்தஸ்து பட்டியலிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நீக்கப்பட்டாலும், தமிழகத்தில் மாநிலக் கட்சிக்கான அந்தஸ்து பட்டியலில் அக்கட்சி இடம்பெற்றுள்ளது. இதன்மூலம், மாநிலத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜ.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருப்பதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Share it if you like it