பாரதப் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் கேட்டு கொண்டதற்கு இணங்க டா டா குழுமம் தனது எண்ணத்தை அண்மையில் டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு வெளிப்படுத்தி இருந்தது.
பாரதப் பிரதமர் மோடி, இந்திய மக்களிடம் கேட்டு கொண்டது பாராட்டுக்குறியது. டாடா குழுமம் ( COVID19- க்கு ) எதிரான போராட்டத்தை வலுப்படுத்த முடிந்த வரை முயற்சி செய்ய கடமைப்பட்டுள்ளோம். ஆக்ஸிஜன் நெருக்கடியைத் தணிக்க, சுகாதார உள்கட்டமைப்பை அதிகரிக்க. டாடா குழு திரவ ஆக்ஸிஜனைக் கொண்டு செல்வதற்கும், நாட்டில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையைத் தணிப்பதற்கும் 24 கிரையோஜெனிக் கொள்கலன்களை இறக்குமதி செய்ய உள்ளோம் என்று தெரிவித்து இருந்தது.
1,500 கோடி ரூபாய் பிரதமர் நிவாரண மற்றும் ரூ.8 கோடி மதிப்பிலான 40,032 பிசிஆர் கருவிகளை தமிழகத்திற்கு டாடா குழுமம் கடந்த ஆண்டு வழங்கி இருந்தது.
இதனை தொடர்ந்து ரிலையன்ஸ் நிறுவனம் தினந்தோறும் 2,000 ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு தலா 50 லிட்டர் வீதம் எரிபொருள் வழங்க ரிலையன்ஸ் முன்வந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
எதற்கெடுத்தாலும் அதானி, அம்பானி, கார்ப்பரேட், என்று தொடர்ந்து விமர்சனம் செய்யும், சீமான், திருமா, சுந்தரவள்ளி, அருணன், போன்ற காமெடி போராளிகள். குறைந்த முதலீட்டில் குடிசை தொழில் செய்து வரும், பிரபல கே.டி பிரதர்ஸ் கலாநிதி மற்றும் தயாநிதி மாறனை ஏன்? வசதியாக மறந்தார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி.
கார்ப்பரேட், கார்ப்பரேட், என்று கைக்கூலி போராளிகள் அலறினாலும். தமிழக மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து. வெறும் வெற்று கூச்சலை மட்டுமே இன்று வரை எழுப்பி வரும். போலி போராளிகளின் முகத்திரையையும் அவர்களின் முகத்தில் ரிலையன்ஸ் மற்றும் டாடா நிறுவனம், கரியை பூசியுள்ளது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.