கொரோனா தொற்றில் பலியானவர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என்பது புரளி ’உதார்’ அமைச்சரின் சிக்ஸர் பதில்..!

கொரோனா தொற்றில் பலியானவர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என்பது புரளி ’உதார்’ அமைச்சரின் சிக்ஸர் பதில்..!

Share it if you like it

தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த பொழுது, அள்ளி தெளித்த வாக்குறுதிகளை தற்பொழுது மறுக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பது நிதர்சனமான உண்மை.

கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்பாக கூட்டணி கட்சி  தலைவர்கள் 11 பேருடன் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

அக்கூட்டத்தில் கி.வீரமணி, வைகோ, ஈஸ்வரன், திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா,பல முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டனர் என்பது அனைவரும் அறிந்ததே.

கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் உயிரிழப்பிற்கு வழங்கப்படும் ரூ.10 லட்சம் நிவாரணம் போதாது. கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும். தடுப்பு பணியாளர்கள் உயிரிழந்தால் குடும்பத்திற்கு ரூ.1கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்பட இக்கூட்டத்தில்8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

ஆளும் கட்சியாக தி.மு.க மாறிய பின்பு தாங்கள் கொடுத்த வாக்குறுதிக்கு மறுப்பு தெரிவிக்கும் அவலநிலைக்கு தி.மு.க தற்பொழுது தள்ளப்பட்டு இருப்பது மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Corona damage; To the families of the survivors Rs 1 crore each Resolution  of DMK Companion Party Meeting || கொரோனா பாதிப்பு; உயிரிழந்தவர்களின்  குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்க ...

Image

 


Share it if you like it