ஊரடங்களிலும் மத பிரச்சாரம் :  கிறிஸ்தவ மிஷ’நரி’கள் வியாபாரம்..!

ஊரடங்களிலும் மத பிரச்சாரம் : கிறிஸ்தவ மிஷ’நரி’கள் வியாபாரம்..!

Share it if you like it

கொரோனா தொற்று மேலும் பரவ கூடாது என்பதற்காக மத்திய, மாநில அரசுகள், பொதுமக்களுக்கு மிக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. ஆனால் இதனை எல்லாம் பொருட்படுத்தாமல் கிறிஸ்தவத்தை பரப்பும் நோக்கில் சிலர் ஈடுபட்டு வருவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓமிக்காரன் தொற்று இந்தியாவில் தீவிரமாக பரவி வரும் சூழலில். பாரதப் பிரதமர் மோடி, மாநில முதல்வர்கள், தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், என பலர் இரவு, பகலாக அரும்பாடுபட்டு இக்கொடிய நோய் தொற்றை கட்டுப்படுத்தும் பணியில் மிக தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, சேவா பாராதி மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் வேகமாக பரவி வரும் ஓமிக்காரானால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு சேவை மனபான்மையுடன் இன்று வரை பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் ஓமிக்காரன் வேகமாக பரவி வரும் சூழலில், பசியால் வாடி நின்ற ஏழை ஒருவருக்கு கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த நபர் ஒருவர். உதவி செய்வது போல உணவு பொட்டலத்தை வழங்கி விட்டு. ஏசு-வை அவரிடம் திணித்த காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்ட, சம்பவத்தை பார்த்த பின்பு கூட மதமாற்றம் செய்யும் மிஷநரிகளின் கொட்டம் அடங்கவில்லை என்று மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it