இந்திய கலாசாரம் உலகிற்கு கிடைத்த பரிசு  –  இந்திய பாரம்பரியத்தின் மீதான தாக்குதல்கள், இந்தியாவை மட்டுமல்ல அது உலகையே பாதிக்கும் –  அமெரிக்க எழுத்தாளர் கருத்து.!

இந்திய கலாசாரம் உலகிற்கு கிடைத்த பரிசு – இந்திய பாரம்பரியத்தின் மீதான தாக்குதல்கள், இந்தியாவை மட்டுமல்ல அது உலகையே பாதிக்கும் – அமெரிக்க எழுத்தாளர் கருத்து.!

Share it if you like it

இந்தியா குறித்து அமெரிக்க எழுத்தாளர் புகழாரம்.

சமூக ஆர்வலர், ஆசிரியர், எழுத்தாளர் என்னும் பன்முகத் தன்மை கொண்டவர் ரெனீ லின். பிறப்பால் நான் அமெரிக்கன் உணர்வால் நான் இந்தியன். உலகத்திற்கே இந்தியா தான் தாய் நாடு, இந்தியர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும் என்று வெளிப்படையாக கூறியவர். இந்தியாவிற்கும், ஹிந்துக்களுக்கும், எதிராக யாரேனும் கருத்து தெரிவித்தால். உடனே கடும் கண்டனத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட கூடியவர்.

இந்த நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் ஹிந்து மதம் குறித்து மீண்டும் ஒரு பதிவினை வெளியிட்டு உள்ளார்.

இந்தியா மற்றும் இந்து கலாச்சாரம் பற்றி தவறான பிரச்சாரங்களை இந்து மதத்தை வெறுப்பவர்கள் உருவாக்குகிறார்கள். இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் பாதுகாக்கவும், பயன்பெறவும், இந்திய கலாச்சாரம் முக்கியமானது. இந்தியாவின் பாரம்பரியத்தின் மீதான எந்தவொரு தாக்குதலும் அது இந்தியாவை மட்டுமல்ல, உலகையே பாதிக்கிறது. இந்தியாவின் கலாசாரம் உலகிற்கு கிடைத்த பரிசு என்று தனது எண்ணத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

ஹிந்து மதத்தை மட்டுமே தொடர்ந்து இழிவுப்படுத்தி வரும் தி.மு.க, தி.க, வி.சி.க, கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள், சில்லறை போராளிகள், கிறிஸ்தவ மிஷநரிகள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள். பேமெண்ட் ஊடகங்கள், இவரை பார்த்தாவது ஹிந்து மதத்தின் மேன்மையை புரிந்து கொள்ள வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it