பிரபல அமெரிக்க எழுத்தாளர் ரெனீ லின், இந்தியா தான் இந்த உலகத்தின் தாய் என்று தனது ட்விட்டரில் பக்கத்தில் பதிவு செய்து இருப்பதற்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
சமூக ஆர்வலர், ஆசிரியர், எழுத்தாளர் என்னும் பன்முகத் தன்மை கொண்டவர் ரெனீ லின். பிறப்பால் நான் அமெரிக்கன் உணர்வால் நான் இந்தியன். உலகத்திற்கே இந்தியா தான் தாய் நாடு, இந்தியர்களுக்கு நாம் அனைவரும் நன்றி சொல்ல வேண்டும் என்று வெளிப்படையாக கூறியவர். இந்தியா மற்றும் இந்தியர்களுக்கு, எதிராக யாரேனும் கருத்து தெரிவித்தால். உடனே கடும் கண்டனத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்ய கூடியவர்.
இந்த நிலையில் தான், மற்றொரு ட்விட்டர் பதிவில் இவ்வாறு தனது எண்ணத்தை பதிவு செய்து உள்ளார்.
மற்ற நாடுகள் அனுபவிக்கும் அனைத்து செழுமையும், வளமையும், பண்டைய இந்தியாவால் தான். இதுதான் இந்தியா, இது தான் உண்மை. இது தான் இந்தியாவின் வேர்கள். இந்தியா இந்த உலகத்தின் தாய் மற்றும் பராமரிப்பாளர் போன்றது, அவள் இந்த உலகில் உள்ள ஒவ்வொரு குடிமகனையும் கவனித்துக்கொண்டால், ஆனால் மேற்குலகம் அதை எல்லாம் திருடி கொண்டது என்று பதிவு செய்து உள்ளார். அமெரிக்க எழுத்தாளர் ரெனீ லின் இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். இந்தியாவில் வாழ்ந்து கொண்டே, இந்தியாவிற்கு எதிராக கருத்து தெரிவிக்கும். நபர்கள் இவரை பார்த்தாவது திருந்த வேண்டும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.