கோஹினூர் வைரம் குறித்து இங்கிலாந்து ஊடகத்தில் நடைபெற்ற விவாதம் தற்போது உலகம் முழுவதும் பேசுப்பொருளாக மாறியுள்ளது.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிரபல ஊடகங்களில் ஒன்றாக இருப்பது ’குட் மார்னிங் பிரிட்டன்’. இந்த ஊடகத்தில், அண்மையில் காரசார விவாதம் ஒன்று நடைபெற்றது. அதாவது, கோஹினூர் வைரம் யாருக்கு சொந்தம் என்ற விவாதம் நடைபெற்றது. இதில், இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் பிரபல பத்திரிகையாளருமான நரிந்தர் கவுர் கலந்து கொண்டார். இதனை, பிரபல பெண் நெறியாளர் எம்மா வெப்ஸ் இந்த விவாதத்தை நடத்தினார்.
பெண் நெறியாளர்; எம்மா வெப்ஸ் கூறியதாவது ;
இந்தியாவை ஆண்டவர்கள் பாகிஸ்தானையும் ஆண்டனர். அப்படியெனில், இந்த வைரத்தை பாகிஸ்தானும் கேட்கலாம் தானே? Persian empire மற்றும் Mugal empire இடையே கடும் போட்டி இருந்தது. இந்த வைரத்தை அடைவதில் பல மன்னர்கள் போட்டியிட்டனர். அதில், பிரிட்டன் வென்றது அதன்பொருட்டு இந்த வைரம் இங்கு வந்திருக்கலாம் தானே என பிரிட்டனுக்கு ஆதரவாக பேசினார்.
இதற்கு, பெண் பத்திரிகையாளர் நரிந்தர் கவுர் கொடுத்த பதிலடி இதோ ; உங்களுக்கு சுத்தமாக வரலாறு தெரியவில்லை. காலனித்துவ ரத்தக்கறை படிந்ததுதான் அந்த வைரம். இந்தியாவிடம், அந்த வைரத்தை உடனே திருப்பி கொடுக்க வேண்டும். ( பிரிட்டன் அரசின் காலனித்துவ ஆட்சியின் வரலாற்றை மேற்கோள்காட்டி ஆவேச பேச்சு). இந்தியாவிற்கு, சுதந்திரம் கொடுத்த நீங்கள் அவர்களிடமிருந்து திருடிய அந்த வைரத்தை இன்று வரை நீங்கள் வைத்திருப்பது கொடுமை.
இந்தியர்கள் கோஹினூர் வைரத்தை பார்க்க இங்கிலாந்து வந்தால் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது என்ன? கொடுமை. அந்த வைரமே அவர்களுடையது தானே என்று ஆவேசமாக பேசினார்.
இதையடுத்து, நரிந்தர் கவுர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு இதோ.
இந்திய மண்ணில் கிடைத்ததே அந்த வைரம். காலனித்துவ ஆட்சியில் லாபம் பார்ப்பது சரியல்ல. காலனித்துவ ஆட்சி முடிவு பெற்றதாக பிரிட்டன் கூறி வருகிறது. ஆனால், கோஹினூர் வைரத்தின் வடிவில் இன்றுவரை அது தொடர்ந்து வருகிறது. எந்தெந்த நாடுகளின் பொக்கிஷங்கள் வெளிநாடுகளில் உள்ளதோ? அதனை, அந்நாட்டுடன் பேசி மீண்டும் கொண்டு வரலாம் என்ற விதியை ஐ.நா. கொண்டு வந்துள்ளது. அதன்படி, பார்த்தால் கோஹினுர் வைரம் இந்தியாவிற்கு தான் சொந்தம் என கூறியுள்ளார்.
இந்திய வம்சாவளியான நரிந்தர் கவுரின் இந்த காணொளிதான் உலகம் முழுவதும் பேசுப் பொருளாகா மாறியுள்ளது. இதனை தொடர்ந்து, கோஹினூர் வைரத்தை பாரதப் பிரதமர் மோடி இந்தியாவிற்கு கொண்டு வரவேண்டும் என நெட்டிசன்கள் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.