சொத்தை ஏழைகளுக்கு எழுதிக் கொடுத்தவர் புரட்சியாளரா? தன் சொத்து வேறு யாருக்கும் சென்று விடக் கூடாது என்பதற்காக 70 வயதில் திருமணம் செய்தவர் புரட்சியாளரா? என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கேள்வி எழுப்பி, ஈ.வெ.ராமசாமியை பங்கம் செய்திருக்கிறார்.
தேனி மாவட்டம் உசிலம்பட்டியில் அகில இந்திய பார்வார்டு பிளாக் முன்னாள் தலைவர் மூக்கையாதேவர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சீமான் பேசுகையில், “வெள்ளைக்காரனின் தூக்கு கயிற்றுக்கு துணிந்து கழுத்தை நீட்டிய மறவர்கள் நம் மன்னர்கள். முதுகுளத்தூர் கலவரத்தில் முத்துராமலிங்க தேவரை சென்னை மத்திய சிறையில் அடைத்து வைத்தனர். அப்போது, மூக்கையாதேவர் அவரை சந்திக்க சென்றார். இச்சந்திப்பின்போது பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கலங்கி நின்று கண்ணீர் சிந்தினார். மக்கள் எப்படி இருக்கின்றனர் என்று கேள்வி கேட்டதாக எழுதி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் திராவிட பன்னிகளிடம் ரத்தம் குடிக்கிற உண்ணியாக இன்றுவரை காங்கிரஸ் ஒட்டிக் கொண்டிருக்கிறது. அன்றைக்கு காங்கிரஸை வீழ்த்த முக்கிய காரணம் மூக்கையா தேவர். பீகார் முதல்வர் நிதீஷ்குமார் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துகிறாரோ? பீகாரில் என்ன பெரியார் பிறந்தாரா? தமிழ்நாட்டில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தைரியம், தில்லு இருக்கா? அப்படி எடுத்தால் இத்தனை ஆண்டுகாலம் நீங்கள் ஆக்கிரமித்தது அம்பலமாகிவிடும். ஏழை மக்களுக்கு தனது சொத்தை பகிர்ந்து கொடுத்த முத்துராமலிங்கத் தேவர், ஜாதித் தலைவராகி விட்டார். ஆனால், தனது சொத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக 70 வயதில் திருமணம் செய்த பெரியார் புரட்சியாளராகி விட்டார்.
உண்மையில் யார் புரட்சியாளர்? முத்துராமலிங்கத் தேவர்தான் உண்மையான புரட்சியாளர். பெரியார் புரட்சியாளரா?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.