பிரதமர் மோடியின் உணவுக்காக மத்திய அரசு எவ்வளவு தொகை செலவு செய்கிறது என்ற கேள்விக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கிடைத்து இருக்கும் பதில் நாட்டு மக்களிடம் மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பாரதப் பிரதமராக மோடி பதவியேற்று கொண்ட பின்பு, பல்வேறு சீர்திருத்தங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். ஏழை, எளியவர்களின் முன்னேற்றத்திற்காக இரவு பகல் என்று பாராமல் மிக கடுமையாக உழைத்து வருகிறார். அந்த வகையில், தாமே மற்றவர்களுக்கு சிறந்த உதாரணமாக இருந்து வருகிறார். இப்படிப்பட்ட சூழலில், பிரதமரின் உணவிற்காக செலவிடப்படும் தொகை எவ்வளவு என தகவல் அறியும் உரிமை சட்டத்திடம் கேள்வி ஒன்று முன்வைக்கப்பட்டது.
இதற்கு, தகவல் அறியும் உரிமை சட்டம் அளித்த பதில், பிரதமர் மோடி தனது உணவு செலவுகளுக்கு அரசின் பணத்தில் ஒரு ரூபாயை கூட பயன்படுத்தி கொள்ளவில்லை. கடந்த, 2014 – ஆம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வரும் மோடி, தனது உணவு செலவுக்கு அரசு பணத்தை பயன்பத்தி கொள்ளவில்லை என்றும், அவரது சொந்த பணத்தில் தான் தமது உணவு தேவைகளை பூர்த்தி செய்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் உணவுக்காக அரசு ஒரு ரூபாய் கூட செலவிடவில்லை என்ற தகவல் நாட்டு மக்களிடம் மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்தான, செய்தியினை பிரபல ஊடகமான தந்தி டிவி வெளியிட்டு இருக்கிறது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் முதல்வர் ஸ்டாலின் குடும்பத்திற்கு நாள் தோறும் அரசு சார்பில் எவ்வளவு தொகை செலவு செய்யப்படுகிறது என்ற கேள்வியை சமூக ஆர்வலர் யாராவது ஒருவர் முன்வைக்க வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.