காளி விமர்சனம்: மம்தா கட்சி எம்.பி.க்கு சமூக ஆர்வலர் தரமான பதிலடி!

காளி விமர்சனம்: மம்தா கட்சி எம்.பி.க்கு சமூக ஆர்வலர் தரமான பதிலடி!

Share it if you like it

மம்தா கட்சி எம்பிக்கு பிரபல சமூக ஆர்வலர் தரமான பதிலடியை வழங்கி இருக்கிறார்.

மாடத்தி, செங்கடல் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் லீனா மணிமேகலை. இவர், கனடா நாடு வாழ் தமிழராக இருந்து வருகிறார். இவர், இயக்கிய டாக்குமென்டரி திரைப்படம் தான் காளி. இப்படத்தின், பர்ஸ்ட் லுக் போஸ்டரை அண்மையில் வெளியிட்டு இருந்தார். ஆனால், இந்த போஸ்டர் ஹிந்துக்கள் மத்தியில் கடும் கோவத்தை ஏற்படுத்தி இருந்தது. இதில், காளி வேடம் அணிந்த பெண்மணி ஒருவர் சிகரெட் புகைப்பது போன்றும், மற்றொரு கையில் ஓரினச் சேர்க்கையாளர்களின் கொடியை பிடித்து இருப்பது போன்று அது அமைந்து இருந்தது.

இந்த போஸ்டருக்கு இந்தியாவை கடந்து உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி இருந்தது. அந்தவகையில், கனடா நாட்டை சேர்ந்தவரும் இந்திய வம்சாவழி மற்றும் எம்.பியுமான சந்திரா ஆர்யா கூறியதாவது; படத்தயாரிப்பாளர் லீனா மணிமேகலையின் காளி போஸ்டரைப் பார்த்தது வேதனை அளிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக, கனடாவில் உள்ள பாரம்பரிய ஹிந்து எதிர்ப்பு மற்றும் இந்திய எதிர்ப்பு குழுக்கள் ஒன்றிணைந்து ஊடகங்களில் ஹிந்து மதத்திற்கு எதிரான கட்டுரைகள் மற்றும் நமது ஹிந்து கோவில்கள் மீதான தாக்குதல்கள் தொடர்வதாக வேதனை தெரிவித்து இருந்தார்.

அந்தவகையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்.பியுமாக இருப்பவர் மஹுவா மொய்த்ரா. இவர், காளி டாக்குமென்டரி திரைப்படத்திற்கு தனது ஆதரவினையும், காளியை குறித்து சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார். இவரது கருத்து மேற்கு வங்கத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. அந்தவகையில், இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

பா.ஜ.க.வின் பிராமணியத்தை எதிர்க்கிறேன். ஆகவே, நான் இந்தியாவில் வாழ விரும்பவில்லை. என் மீது எத்தனை வழக்கு வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள் சந்திக்க தயாராக இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

இதற்கு, சமூக ஆர்வலர் ரிஷி பக்ரி கொடுத்த பதிலடி இதோ.

மோடி பிராமணர் அல்ல, அமித் ஷா பிராமணர் அல்ல, ராம்நாத் கோவிந்த் பிராமணர் அல்ல, தற்பொழுதைய ஜனாதிபதி வேட்பாளர் முர்முவும் பிராமணர் அல்ல. அவ்வளவு ஏன்? உங்கள் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியும் அவரது மருமகன் அபிஷேக் பானர்ஜியும் தான் பிராமணர்கள். எனவே, மஹீவா ஒருவேளை தனது கட்சி தலைமையை இப்படி குறிப்பிடுகிறாரோ என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.


Share it if you like it