வெளியிலிருந்து வந்த மதங்கள்… என்னுடைய மதம்தான் பெரியது என்று கூறியது… இதுதான் பிரச்சனையே இங்கு உருவாக காரணம் – ஆளுநர் அதிரடி பேச்சு!

வெளியிலிருந்து வந்த மதங்கள்… என்னுடைய மதம்தான் பெரியது என்று கூறியது… இதுதான் பிரச்சனையே இங்கு உருவாக காரணம் – ஆளுநர் அதிரடி பேச்சு!

Share it if you like it

பிஷப் போப், கால்டுவெல் போன்றவர்கள் நமது அடையாளத்தை அழிக்க வேண்டும் என நினைத்தவர்கள். பத்தாயிரம் வருட சனாதன தர்மத்தின் உட்சநட்சத்திரம் வள்ளலார் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவருட்பிரகாச வள்ளலாரின் 200வது ஜெயந்தி நடைபெற்றது. இந்த, விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டார். அப்போது, இவ்வாறு அவர் பேசினார் : “உலகின் மிகப்பெரும் ஞானியான வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். சனாதன தர்மத்தின் மாணவனாகிய நான் பல ரிஷிகளின் நூல்களை படித்தவன். அப்போது வள்ளலாரின் நூல்களையும் படித்தபோது மிக பிரமிப்பை ஏற்படுத்தியது.

பத்தாயிரம் வருடம் சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார். அறியாமை மற்றும் காழ்ப்புணர்ச்சி காரணமாக சனாதன தர்மத்தை சிலர் தவறாக நினைத்துள்ளனர். அடிப்படை உண்மை என்பது “ஒரு பரமேஸ்வரன், அவன் படைத்தது மனிதன், விலங்குகள், செடி கொடி என அனைத்தும் ஒரு குடும்பமே. இங்குள்ள நூற்றுக்கணக்கான மக்கள் உடை, தோற்றம் என வெவ்வேறாக உள்ளன. ஆனால், அனைத்தையும் தாண்டி உங்களில் என்னையும், என்னில் உங்களையும் காண்பது தான் சனாதன தர்மம்”.

ஆளுநர் ரவி

சனாதன தர்மத்தை ஏற்றாலும் எதிர்த்தாலும் அவர்களும் சனாதன தர்மத்திற்குள் தான் இருப்பார்கள். “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்னும் வள்ளலாரின் வரிகள் சனாதன தர்மத்தின் எதிரொலி. 200 ஆண்டுகளுக்கு முன் கார் இருளை நீக்க வந்த ஜோதி தான் வள்ளலார். ஆங்கிலேயரின் கடுமையான சுரண்டலுக்கு நமது நாடு உள்ளான போது தோன்றியவர் தான் வள்ளலார். நமது பாரதம் சனாதன தர்மம் நிறைந்தது.

ஆளுநர் ரவி

ஆயிரக்கணக்கான மார்க்கங்கள் இருந்த போதும், “புதியதாக வெளிநாட்டிலிருந்து வந்த வழிபாட்டு முறையால் நமது அடையாளம் மறைந்து போனது”.இந்திய பண்பாட்டில் சிறு தெய்வம், பெரும் தெய்வ வழிபாடு இருந்தது. ஆனால், ஒருவரும் சண்டையிட்டுக் கொண்டதில்லை. வெளியில் இருந்து புதியதாக வந்த மதங்கள் என்னுடைய மதம் பெரிது என்று கூறிய போது தான் பிரச்னை உருவானது. பிஷப் போப், கால்டுவெல் போன்றவர்கள் நமது அடையாளத்தை அழிக்க வேண்டும் என நினைத்தவர்கள். ஆன்மீகத்தில் உயர்ந்த நாடு பாரதநாடு.

*நமது நாட்டின் பிரதமர் பேசுவதை உலக தலைவர்கள் கவனித்துக்கொண்டுள்ளனர். இந்தியா வல்லரசாகி உலகத்தின் தலைமையை ஏற்கும். இந்தியா வளர்ச்சிப்பாதையில் செல்லும் போது “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்னும் வார்த்தையை ஏற்போம். வள்ளலார் சனாதனத்தை பற்றி தெளிவாக தெரிவித்துள்ளார்.. ஆனால் சில தவறாக தெரிவிக்கின்றனர். நானும் வள்ளலாரின் பக்தர் தான் வள்ளலாரின் கொள்கையை உலகம் முழுவதும் பரப்புவோம் என்று பேசினார்.

வள்ளலார் 200-வது ஜெயந்தி விழா


Share it if you like it