ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு உடனே அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பானது கடந்த 1925-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி விஜயதசமி தினத்தன்று தேசியவாதிகளால் துவங்கப்பட்டது. இந்த அமைப்பானது தற்போது நாடு முழுவதும் பரவி இருக்கிறது. பாரத நாட்டில் அவ்வபோது ஏற்படும் இயற்கை சீற்றங்கள் மற்றும் கொரோனா தொற்று போன்ற காலக்கட்டங்களில் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், மக்கள் சேவையே மகேசன் சேவையாக நினைத்து இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஆகவே, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஊர்வலம் நடத்துவது உள்ளிட்ட விஷயங்களுக்கு ஐம்மு காஷ்மீர் உட்பட அனைத்து மாநிலங்களிலும் அனுமதி இருக்கிறது.
ஆனால், தமிழகத்தில் மட்டும் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், அக்டோபர் 2-ம் தேதி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அணிவகுப்பு நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முடிவு செய்தது. எனவே, அணிவகுப்பு நடத்துவதற்கு அனுமதி வேண்டி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்துவதற்கு செப்டம்பர் 28–ம் தேதிக்குள் காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருக்கிறது.