ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி படுகொலை: அடிப்படைவாதிகள் சபதம் எடுத்துக் கொண்ட காணொளி வைரல்!

ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி படுகொலை: அடிப்படைவாதிகள் சபதம் எடுத்துக் கொண்ட காணொளி வைரல்!

Share it if you like it

ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த நிர்வாகியை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அமைப்பான பி.எஃப்.ஐ படுகொலை செய்யும் முன் சபதம் எடுத்துக் கொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாக துவங்கியுள்ளது.

இந்தியாவிலேயே மேற்கு வங்கத்திற்கு அடுத்து கேரளாவில் தான் அதிக அளவில் அரசியல் படுகொலைகள் தொடர்கதையாக நிகழ்ந்து வருகிறது. தமிழகத்தில் எப்படியோ? அதுபோல கேரளாவிலும் நாளுக்கு நாள் சட்டம், ஒழுங்கு கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது. கம்யூனிஸ்ட் ஆட்சி அமைந்த சில மாதங்களிலேயே ஆர்.எஸ். எஸ் மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த பலர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு உள்ளனர். பாலக்காடு அருகே தனது மனைவியுடன் சென்று கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர் சஞ்சித் (வயது 27) SDPI குண்டர்களால் சமீபத்தில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து, ஓபிசி மோர்ச்சா மாநிலச் செயலாளர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன் PFI கட்சியை சேர்ந்த நபர்களால் பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இப்படியாக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மீது இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்த வேண்டிய ஆளும் கம்யூனிஸ்ட் அரசு ஓட்டு அரசியலை கருத்தில் கொண்டு கள்ள மெளனமாக இருப்பதாக பலர் வேதனை தெரிவித்து வருகின்றனர். இதுதவிர, கேரள காவல்துறையில் பணியாற்றிய காவலர் பி.கே. அனஸ் என்பவன், உயிருக்கு கடும் அச்சுறுத்தல் உள்ள பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர்கள் குறித்த ரகசிய தகவல்களை SDPI கட்சிக்கு கசிய விட்ட சம்பவம் கேரள மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கோவத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

இதுபோன்ற ஏராளமான ஸ்லீப்பர் செல்கள் கேரள காவல்துறையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில், பி.எப்.ஐ அமைப்பை சேர்ந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சிலர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த நவநீத சீனிவாசனை கொடூரமான முறையில் படுகொலை செய்துள்ளனர். இச்சம்பவம் கேரள மக்களிடையே மீண்டும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான பி.எஃப்.ஐ அமைப்பை சேர்ந்தவர்கள் இந்த கொடூர செயலை செய்யும் முன்பு சபதம் எடுத்துக் கொண்ட காணொளி தற்பொழுது வைரலாக துவங்கியுள்ளது.

ஒவ்வொரு மாநிலமும் இந்த அமைப்பை படிப்படியாக தடை செய்து வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் இருந்தே இந்த அமைப்பை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு மாதங்களில் பாஜக, ஆர்.எஸ்.எஸ், சேர்ந்த மூவர் படுகொலை…!

Share it if you like it