கேரளாவில் பினராய் விஜயன் தலைமையில் கம்யூனிஸ்ட் ஆட்சி தற்பொழுது நடைப்பெற்று வருகிறது.
இந்தியாவிலேயே மேற்கு வங்கத்திற்கு அடுத்து கேரளாவில் தான் அதிக அளவில் அரசியல் படுகொலைகள் இன்று வரை தொடர்கதையாக நிகழ்ந்து வருகிறது. நாளுக்கு நாள் சட்டம், ஒழுங்கு, அம்மாநிலத்தில் மோசமாகி கொண்டே வருவதை ஊடகங்கள், பத்திரிக்கைகள், மூலம் எளிதில் அறிந்து கொள்ள முடியும்.
கம்யூனிஸ்ட் ஆட்சி அமைந்த சில மாதங்களிலேயே ஆர்.எஸ். எஸ், பா.ஜ.க கட்சியை சேர்ந்த பலர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு உள்ளனர். பாலக்காடு அருகே தனது மனைவியுடன் சென்று கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர் சஞ்சித் (வயது 27) SDPI குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில். அதனை தொடர்ந்து ஓபிசி மோர்ச்சா மாநிலச் செயலாளர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன் PFI கட்சியை சேர்ந்த நபர்களால் பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டதாக பலர் குற்றச்சாட்டு சுமத்தி வருகின்றனர்.
ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என பலருக்கு போதிய பாதுகாப்பு கேரளாவில் தற்பொழுது இல்லை என்று கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்கள் மீது அம்மாநில சமூக ஆர்வலர்கள் பகீர் குற்றச்சாட்டினை தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் தான் வேலியே பயிரை மேய்ந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.
கேரள காவல்துறையில் பணியாற்றி வரக்கூடிய காவலர் பி.கே. அனஸ் என்பவர். பா.ஜ.க கட்சி, ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர்கள், குறித்த ரகசிய தகவல்களை SDPI கட்சிக்கு கசிய விட்டு உள்ள சம்பவம் கேரள மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனஸ் போன்று ஏராளமான ஸ்லீப்பர் செல்கள் கேரள காவல்துறையில் இருக்க கூடும். அவர்களை இனம் கண்டு இப்பொழுதாவது களையெடுக்க கையாலாகாத கேரள அரசு முன்வர வேண்டும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.