ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வீசிய சம்பவம் கேரள மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியாவிலேயே, கம்யூனிஸ்ட்கள் ஆட்சி செய்யும் ஒரே மாநிலமாக இருப்பது கேரளா. இம்மாநிலத்தின், முதல்வராக இருப்பவர் பினராயி விஜயன். இவரது, ஆட்சியில், லஞ்சம், ஊழல், கொலை மற்றும் கொள்ளை என சட்டம் ஒழுங்கு தமிழகம் போல சந்தி சிரித்து வருகிறது. இதுதவிர, பொதுமக்கள் அச்சத்துடனும், பயத்துடனும் வாழும் அவல நிலை ஏற்பட்டு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் கூறி வருகின்றனர்.
அதனை மெய்ப்பிக்கும் வகையில், ஆர்.எஸ்.எஸ்.ஸின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த பல மூத்த தலைவர்கள் ஆளும் கட்சியை சேர்ந்த குண்டர்களால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தான், கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பையனூரில் அமைந்து இருக்கும் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் இன்று (ஜூலை 12) அதிகாலை குண்டு வீசப்பட்டு இருக்கிறது. இந்த குண்டு வீச்சில் அதிர்ஷ்டவசமாக எந்த விதமான உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதற்கு மாறாக, அலுவலகத்தின் உள்ள இருந்த ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் சேதமடைந்ததாக சொல்லப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன. இச்சம்பவத்தின், தாக்கமே குறையாத சூழலில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் இன்று குண்டு வீசப்பட்டு இருக்கும் செய்தி கேரள மக்களிடையே பெரும் அச்சத்தை உருவாக்கி இருக்கிறது. இதன் பின்னால், சி.பி.எம் இருப்பதாக ஆர்.எஸ்.எஸ் குற்றம் சுமத்தி இருக்கிறது.