கேரள மாடல் ஆட்சியின் அவலம்: ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி கொடூர கொலை!

கேரள மாடல் ஆட்சியின் அவலம்: ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி கொடூர கொலை!

Share it if you like it

ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த நிர்வாகியை கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த குண்டர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

இந்தியாவிலேயே, மேற்கு வங்கத்திற்கு அடுத்து கேரளாவில் தான் அதிக அளவில் அரசியல் படுகொலைகள் தொடர் கதையாக இருந்து வருகிறது. தமிழகத்தில் எப்படி? சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளதோ, அதைவிட பன்மடங்கு கேரளாவிலும் இருந்து வருகின்றன. கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி அமைந்த சில மாதங்களிலேயே ஆர்.எஸ். எஸ். மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு இருக்கின்றனர். இதனிடையே, பாலக்காடு அருகே தனது மனைவியுடன் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த, ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர் சஞ்சித் 27, SDPI-யை கட்சியை சேர்ந்த குண்டர்களால் கொடூரமான முறையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு படுகொலை செய்தனர். அதனை தொடர்ந்து, ஓபிசி மோர்ச்சா மாநிலச் செயலாளர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன் என்பவரை PFI கட்சியை சேர்ந்த குண்டர்கள் பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்தனர்.

இதனிடையே, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தனது சங்க அலுவலகத்தில் குருதக்ஷிணா நிகழ்ச்சி ஒன்றினை நடத்தி இருக்கிறது. அந்நிகழ்ச்சியில், கலந்து கொண்டு ஜிம்னேஷ் மற்றும் அவரது நண்பர்கள் வீடு திரும்பி இருக்கின்றனர். அப்போது, ஆளும் கட்சியை சேர்ந்த சி.பி.எம். குண்டர்கள் ஒரு குழுவாக சென்று ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். இச்சம்பவத்தில், ஆதர்ஷ், பி.வி ஜிஷ்ணு, டி. அக்ஷய், கேபி ஆதர்ஷ் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து, அவர்கள் தலச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், ஜிம்னேஷ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கின்றன.

காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையின் படி, அதிகமான ரத்தம் வெளியேறியதே, ஜிம்னேஷ் மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it