ஐ.நா.வில் நிரந்தர உறுப்பினர்: இந்தியாவுக்கு ரஷ்யா மீண்டும் ஆதரவு!

ஐ.நா.வில் நிரந்தர உறுப்பினர்: இந்தியாவுக்கு ரஷ்யா மீண்டும் ஆதரவு!

Share it if you like it

ஐ.நா.வில் இந்தியா ஈடுபாட்டுடன் பணியாற்றி வருகிறது. ஆகவே, இந்தியாவை ஐ.நா.வில் நிரந்த உறுப்பினராக கணக்கில் கொள்ள வேண்டும் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் கூறியிருக்கிறார்.

பாரத பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு, பல்வேறு நாடுகளுக்கும் சுற்றுப் பயணம் செய்து, அந்நாட்டுத் தலைவர்களுடன் நல்ல நட்புறவை பேணி வருகிறார். குறிப்பாக, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுடன் நல்லுறவை மேம்படுத்தி இருக்கிறார். இதனால், அமெரிக்காவும், ரஷ்யாவும் இந்தியாவை புகழ்ந்து வருகின்றன. எல்லையில் சீனா அத்துமீறி வரும் நிலையில், இந்தியாவின் மீது யார் கைவைத்தாலும், ரஷ்யா பாதுகாப்பு அரணாக முன்னால் நிற்கும் என்று ரஷ்ய அதிபர் புதின் கூறியது குறிப்பிடத்தக்கது. அதேபோல, சமீபத்தில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடு என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரியும், ஆசிய நாடுகளுக்கான ஒருங்கிணைப்பாளருமான கர்ட் கேம்பெல், எதிர்காலத்தில் இந்தியா வல்லரசு நாடாகத் திகழும் என்று கூறியிருந்தார். இந்த சூழலில்தான், ஐ.நா.வில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராகக் கருத வேண்டும் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அதிகாரி கூறியிருக்கிறார். இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் கூறுகையில், “பொருளாதார வளர்ச்சியில் முன்னணி வகிக்கும் நாடுகளில் தற்போது இந்தியாவும் ஒன்றாக உள்ளது. ஒருவேளை இதன் தலைவராகக்கூட இந்தியா ஆகலாம். மேலும், வேறு எந்த நாட்டையும்விட இந்தியாவின் மக்கள் தொகை விரைவில் பெரியளவில் அதிகரிக்க கூடும். தவிர, பல்வேறு வகையான விவகாரங்களில் தீர்வு காண்பதில் இந்தியா ராஜதந்திர அனுபவம் வாய்ந்த நாடாக, அங்கீகாரம் பெற்று தனது பகுதியில் தனக்கென ஒரு மதிப்பை பெற்றிருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஐ.நா.வில் இந்தியா ஈடுபாட்டுடன் பணியாற்றி வருகிறது. அதேபோல, தெற்காசியாவில் பல்வேறு ஒருங்கிணைக்கும் கட்டமைப்பு பணியையும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புடன் இணைந்து இந்தியா சிறப்புடன் செய்து வருகிறது. தவிர, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் சர்வதேச செயற்பாட்டாளர்களாகவும் இருக்கிறார்கள். எனவே, இரு நாடுகளையும் ஐ.நா. கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக கணக்கில் கொள்ள வேண்டும்” என்று கூறியிருக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் நடந்த 77-வது ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பேசிய லாவ்ரோவ், “ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த நாடுகள், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சேர்க்கப்பட்டால், ஜனநாயகம் நிறைந்திருக்கும்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it