மறைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் குறித்து சச்சின் டெண்டுல்கர் உருக்கம்.
ஷேன் வார்னேவின் முதலாம் ஆண்டு நினைவு குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு இதோ.
களத்தில் நாம் இருவரும் சமன் செய்துள்ளோம். அதே அளவிற்கு களத்திற்கு வெளியிலும் நமது நட்புறவு தொடர்ந்துள்ளது. ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக மட்டுமில்லாமல் சிறந்த நண்பராகவும் உங்களை நான் மிஸ் செய்கிறேன். உங்கள் நகைச்சுவை உணர்வின் வாயிலாக நீங்கள் சொர்க்கத்தை அழகான இடமாக மாற்றி இருப்பீர்கள் என நான் நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.