தலைவன் என்பவன் அனைவரையும் சமமாக மதிப்பவன்! அதில் வ.உ.சி அப்படி வாழ்ந்து காட்டியவர். ஒரு அருந்ததிய சிறுவனை தத்தெடுத்து வளர்த்தினார். தன் சுயசாதிகாரர்கள் அதை கடுமையாக எதிர்க்க அதை பொருட்படுத்தாமல் தினமும் தன் மடியில் அமர்த்தி உணவு ஊட்டிய மாபெரும் தலைவர் வ.உ.சி.
இதை சாதி ஒழிப்பு பேசிய எந்த தலைவரும் செய்தது இல்லை. மேடையில் ஒரு பேச்சு வீட்டில் வேறு நிலை என்பது தான் இங்கு பல சாதி ஒழிப்பு பேசியவர்களின் நிலையே.
அடுத்து வ.உ.சியுடன் பயணித்த சுவாமி சகஜானந்தர் பறையர் சமூகத்தை சேர்ந்தவர். வஉசி எங்கு சென்றாலும் உடன் சகஜானந்தர் இருப்பார்.
சகஜானந்தருக்கு தமிழும் திருக்குறளும் கற்பித்தவர் தலைவர் வ.உ.சி. பின்னாளில் சுவாமி சகஜானந்தர் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். நந்தனார் பெயரில் மடமும் கல்விசாலையும் உருவாக்கினார். சுவாமி சகஜானந்தரை உண்மையான அந்தணன் நீதானப்பா என்றவர் வ. உ.சி.
இந்த மாபெரும் தலைவரை தான் ஆங்கிலேய நீதிபதி பின்ஹே, ஆங்கிலேயருக்கும் இந்தியர்களுக்கும் பிரிவினையை தூண்டும் தேசதுரோகி என அறிவித்து தண்டனை வழங்கினான்! அதை எதிர்கொள்ளும் ஆற்றலும் வ.உ.சி என்கிற மாமனிதனுக்கு இருந்தது.
வ.உ.சியின் எழுத்துக்களை படித்தவன் என்ற முறையில் அரசியலில் என் குரு வ.உ.சி ஒருவரே! தியாகம் தான் அரசியல், தியாகத்தின் உரு தலைவர் வ.உ.சி.
-திரு.பார்கவன் சோழன்