மதுரை வீரன் கோவிலுக்கு படையல் போட நினைத்தால் அநீதி..! பக்ரீத்துக்கு மாடுகளை பலி கொடுத்தால் சமூகநீதியா?  

மதுரை வீரன் கோவிலுக்கு படையல் போட நினைத்தால் அநீதி..! பக்ரீத்துக்கு மாடுகளை பலி கொடுத்தால் சமூகநீதியா?  

Share it if you like it

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம் மற்றும் நகரம் மணிவிளான் 7-வது தெருவில் நகராட்சி மற்றும் அங்கன்வாடி குழந்தைகள் பராமரிப்பு மையத்திற்கு அருகே காட்டு நாயக்கர் சமூகத்தினர் ஜூலை மாத இறுதியில் அப்பகுதியின் முக்கிய சாலையில் சாமிக்கு பன்றி வெட்டி வழிபாடு நடத்துவதால் அப்பகுதி மக்களுக்கு சுகாதர சீர்கேடு ஏற்படுவதாகவும், மன உளைச்சல் ஏற்படுவதாகவும், அறந்தாங்கி முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் ஜமாத் தலைவர் மற்றும் மணிவிளான் 7-வது தெரு பொதுமக்கள் அளித்துள்ள மனு தொடர்பாக இரு தரப்பினருக்கு கருத்து வேறுபாடு இருந்து வருவதாக, இரு தரப்பிரனரையும் அழைத்து சமாதானக்கூட்டம் நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண அறந்தாங்கி வட்டாட்சியர் தெரிவித்துள்ளதாக துண்டு பிரச்சுரம் ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிக்கை அன்று ஹிந்துக்கள் இருக்கும் பகுதியில்  மாடுகளை பலி கொடுக்கலாம் அது தவறில்லை. ஹிந்து சமூகத்தை சேர்ந்தவர்கள் தாங்கள் வழிபாடும், கோவிலுக்கு பன்றி படையல் போட வேண்டும் என்று விரும்பினால் அதற்கு தடை போட வேண்டும் என்று இஸ்லாமியர்கள் கேட்பது எந்த விதத்தில் நியாயம் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

twitter

 


Share it if you like it