திராவிட மாடல் ஆட்சியில் பெண் காவலர்களுக்கு தொடரும் அவலம்!

திராவிட மாடல் ஆட்சியில் பெண் காவலர்களுக்கு தொடரும் அவலம்!

Share it if you like it

தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதோடு, பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுகிறது என்பது சேலத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தின் மூலம் நிரூபணமாகி இருக்கிறது.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நிலவி வருகிறது. எங்கு பார்த்தாலும், கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், செயின் பறிப்பு போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்த சூழலில், பெண் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது என்பதுதான் வேதனை. சென்னையில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பெண் காவலர் ஒருவருக்கு தி.மு.க.வைச் சேர்ந்த 2 பேர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியது. அதேபோல, ஓடும் ரயிலில் பெண் காவலர் ஒருவரை கத்தியால் குத்திய சம்பவம் அடுத்த பரபரப்பைக் கூட்டியது. இந்த சூழலில், சேலத்தில் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த பெண் காவலரை கத்தியால் குத்திய சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சேலம் மாவட்டம் வீராணம் ஊராட்சி சுக்கம்பட்டி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த மணி என்பவரது மனைவி அஞ்சலிதேவி. இவர், சேலம் மாநகர ஊர்க்காவல் படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு, நேற்று காலை சேலம் டவுன் பகுதியில் பணி ஒதுக்கப்பட்டிருந்தது. பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக காலை 11.30 மணியளவில் பழைய பஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது, அங்கிருந்த வாலிபர் ஒருவர் அஞ்சலி தேவியுடன் தகராறில் ஈடுபட்டதோடு, திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்திைய எடுத்து அஞ்சலி தேவியை குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். மார்பு பகுதிக்கு அருகில் கத்திகுத்து விழுந்ததால், நிலைகுலைந்த அஞ்சலிதேவி மயங்கி விழுந்தார். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அஞ்சலி தேவியை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், அஞ்சலிதேவியை கத்தியால் குத்தியது கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பது தெரியவந்திருக்கிறது. மேலும், சதீஷுக்கு 2 லட்சம் ரூபாய் ரொக்கமும், 2 பவுன் தங்க நகைகளையும் அஞ்சலிதேவி கொடுத்திருக்கிறார். இதை திருப்பிக் கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அஞ்சலிதேவியை குத்தியது தெரியவந்தது. மேலும், பணம் கொடுத்ததது குறித்து அஞ்சலிதேவி ஏற்கெனவே வீராணம் போலீஸில் புகாரும் செய்திருக்கிறார். இதையடுத்து, கத்தியால் குத்திவிட்டு எஸ்கேப்பான சதீஷை போலீஸார் தேடி வருகிறார்கள். இச்சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it