சமாஜ்வாதி கட்சி திடீரென கலைப்பு : அகிலேஷ் யாதவ் அதிரடி அறிவிப்பு !

சமாஜ்வாதி கட்சி திடீரென கலைப்பு : அகிலேஷ் யாதவ் அதிரடி அறிவிப்பு !

Share it if you like it

உத்திரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவால் தோற்றுவிக்கப்பட்ட சமாஜ்வாதி கட்சி தற்போது உத்தரப்பிரதேசம் மட்டுமல்லாது உத்தராகண்ட், மத்திய பிரதேசம் உட்பட வட மாநிலங்களில் வலுவாக இருந்து வருகிறது. தென் மாநிலங்களிலும் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் அக்கட்சிக்கு அமைப்புகள் உள்ளன.

தற்போது அக்கட்சியின் தலைவராக அகிலேஷ் யாதவ் உள்ளார். இவர் இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவராகவும் விளங்குவதால் பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைப்பதில் மும்முரமாக இருந்து வருகிறார். கூட்டணியில் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 17 இடங்களை ஒதுக்கவும் இவர் முன்வந்துள்ளார். இந்நிலையில் அங்கு மாயாவதி கட்சியையும் இந்தியா கூட்டணியில் இணைக்க மும்முரம் காட்டப்படுகிறது

இந்த நிலையில் சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாடு பிரிவை கலைத்து அகிலேஷ் யாதவ் அதிரடி உத்தரவிட்டுள்ளார். சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாடு பிரிவு தலைவராக சிதம்பரத்தைச் சேர்ந்த என்.இளங்கோ செயல்பட்டு வந்தார். அவரது செயல்பாடுகள் சரியில்லாததன் காரணமாக அவரை மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாகவும், தமிழ்நாடு மாநில சமாஜ்வாதி கட்சி கலைக்கப்படுவதாகவும் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் சமாஜ்வாதி கட்சியின் மாநில தலைவரின் செயல்பாடுகள் அக்கட்சிக்கு எதிரானதாக அமைந்துள்ளதாக அகிலேஷ் யாதவிற்கு புகார்கள் சென்ற நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.


Share it if you like it