சனாதன ஒழிப்பு மாநாடு – உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் – சிக்கலில் தமிழக அரசு

சனாதன ஒழிப்பு மாநாடு – உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் – சிக்கலில் தமிழக அரசு

Share it if you like it

சில வாரங்களுக்கு முன்பு தமிழகத்தில் திராவிடர் கழகத்தின் ஆதரவு அமைப்பான தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு நிகழ்ச்சி உள் அரங்க நிகழ்வாக நடத்தப்பட்டது. தமிழக அரசின் அனுமதியோடும் தமிழக காவல்துறையின் பாதுகாப்போடும் நடந்த இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் இந்து அறநிலையத்துறை அமைச்சரும் திமுகவின் வட சென்னை மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான சேக்கர்பாபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டிருந்தார். தமிழக முதல்வரின் மகனும் திமுகவின் இளைஞர் அணி செயலாளர் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றொரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

இந்த இரண்டு சிறப்பு அழைப்பாளர்களும் விழாவில் பங்கேற்றதோடு சனாதனத் தர்மத்திற்கு எதிராக துவேஷிக்கும்படியான வன்மமான கருத்துக்களை மேடையில் பேசியிருந்தார்கள். குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் பேசும்போது சனாதனத்தை எதிர்க்க வேண்டும் என்பதை விட அழிக்க வேண்டும் என்பதே சரியான நிலைப்பாடு . அந்த வகையில் உங்களின் தலைப்பில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. உங்களோடு நான் ஒத்துப் போகிறேன்‌ இந்த விழாவில் பங்கேற்றதிலும் பெருமிதம். சனாதனத்தை எதிர்ப்பதை விட அழிப்பது என்பதே நிரந்தர தீர்வு. அந்த வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து சனாதனத்தை அழிக்க களம் காண வேண்டும் என்று பேசி இருந்தார்.

தமிழகத்தின் இந்து அறநிலையத்துறை என்ற பெயரில் ஆலயங்களின் நிர்வாகம் ஆலய சொத்துக்கள் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களை கவனிக்கும் அமைச்சரகத்தின் அமைச்சராக இருக்கும் ஒருவர் தான் சார்ந்த இந்து சமயத்தை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றது. மேடையில் வைத்து சக அமைச்சர் சக சட்டமன்ற உறுப்பினர் தான் சார்ந்த கட்சியின் பொறுப்பாளர் என்ற வகையில் உதயநிதியின் பேச்சுக்களை கண்டிக்காமல் ஆரவாரம் செய்ததும் பெரும் சர்ச்சைகளை எழுப்பியது.

திமுக என்ற கட்சியை கடந்து ஒரு மாநிலத்தின் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மக்கள் பிரதிநிதி மாநில அமைச்சர் என்ற வகையில் எந்த ஒரு மதத்திற்கு எதிராக வன்மத்தை தூண்டும் வகையில் பேசுவது இந்திய அரசியலமைப்பு சட்ட சாசனத்திற்கும் பதவி பிரமாணத்திற்கும் எதிரானது என்று உதயநிதியின் பேச்சுக்கு தமிழகத்தை கடந்து நாடு முழுவதிலும் வளர்த்த எதிர்ப்பு கிளம்பியது.

இந்த விவகாரம் தேசிய அளவில் பேசு பொருளாக்கிய நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உதயநிதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்ததோடு நிச்சயமாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசி இருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக உதயநிதி பேசும் போது நான் கலைஞரின் பேரன் . பெரியார் மற்றும் அண்ணாவின் வழியில் வாழ்பவன். இந்த காவிகளின் மிரட்டலுக்கு எல்லாம் நான் அஞ்ச மாட்டேன். எப்படி கொரோனா மலேரியா டெங்குவை எதிர்க்காமல் ஒழிக்க அனைவரும் ஒன்றிணைந்து போராடினோமோ? அதே போல் அனைவரும் ஒன்றிணைந்து சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என்று மேலும் வன்மத்தை தூண்டும் வகையில் பேசினார். எங்களுக்கு ஆட்சி போனாலும் கவலை இல்லை. சனாதன ஒழிப்பு தான் முக்கியம். திமுக என்ற கட்சி உருவாக்கப்பட்டதே சாதனத்தை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் என்று தெளிவாகப் பேசினார்.

இதை அடுத்து அவரது பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்தை எதிர்ப்பும் கண்டனங்கள் வலுத்தது . அவர்கள் சார்ந்து இருந்த ஐஎன்டிஐஏ கூட்டணியிலேயே பலரும் அவரது கருத்திற்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தார்கள். பல்வேறு இடங்களில் அவர் மீது வழக்கும் தொடரப்பட்டது. இந்நிலையில் நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தாமாக முன்வந்து உதயநிதியின் சனாதன ஒழிப்பு பேச்சு தமிழகத்தில் ஒரு மாநில அரசே முழு அனுமதியும் பாதுகாப்பும் கொடுத்து சனாதன ஒழிப்பு மாநாட்டை நடத்தி கொடுத்தது உள்ளிட்ட விவகாரங்களில் முன் வைத்து புகார் மனுக்களை அனுப்பி உள்ளார்கள்.

பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக வழக்குகள் பதியப்பட்டு போராட்டங்களும் நடைபெற்ற நிலையில் உச்ச நீதிமன்றம் தற்போது இந்த விவகாரத்தை கையில் எடுத்திருக்கிறது. இந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ஒரு குறிப்பிட்ட மதத்திற்கும் அது சார்ந்த வாழ்வியலில் பின்பற்றி வாழும் மக்களுக்கும் எதிராக வன்மத்தை வளர்க்கும் விதமான பேச்சுக்களை பேசியதாக அது பற்றிய விளக்கம் கேட்டு உதயநிதி ஸ்டாலின் சேகர் பாபு என்ற இரண்டு தமிழக அமைச்சர்களுக்கும் தனித்தனியே உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது . மேலும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பொது அமைதியை பராமரிக்க வேண்டியது மாநில அரசின் முதல் கடமை. அவ்வகையில் ஒரு மதத்திற்கும் அதன் வழியில் வாழும் மக்களுக்கும் எதிரான ஒரு மாநாட்டை நடத்த அனுமதி கொடுத்ததும் அதற்கு அனுமதியும் முழு பாதுகாப்பும் வழங்கியதோடு மாநில அரசின் இரண்டு அமைச்சர்கள் பங்கேற்று ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக பேசுவதற்கும் அனுமதி கொடுத்த மாநில அரசின் செயலுக்கு விளக்கம் கோரியும் தமிழக அரசுக்கும் ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த சனாதன ஒழிப்பு மாநாடு என்ற பெயரில் தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னெடுப்பதும் சனாதன எதிர்ப்பு மாநாடு என்ற பெயரில் ஆங்காங்கே நிகழ்ச்சிகளை நடத்துவதும் சனாதனத்தின் வழியில் வாழும் மக்களை அவர்களின் வாழ்வியலை அவமதிக்கும் விதமாக அவர்களின் நம்பிக்கைகள் வாழ்வியலை சிதைக்கும் வகையில் தொடர்ச்சியாக பல்வேறு அமைப்புகள் செயல்படுகிறது. ஆங்காங்கே சிறிய அளவில் நடந்து வந்த நிகழ்வு ஒரு மாபெரும் சனாதன எதிர்ப்பு மாநாடு என்ற பெயரில் சில வருடங்கள் முன்பு நடந்தேறியது . அதன் தொடர்ச்சியாக தற்போது ஆட்சியாளர்கள் ஆதரவோடு சனாதன ஒழிப்பு மாநாடு என்ற பெயரிலேயே முழுமையான சனாதன எதிர்ப்புகள் அரங்கேறி வருகிறது. இது மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட தரப்பு மக்களை அச்சத்தில் அச்சுறுத்தலில் நிறுத்தும் ஒரு நிகழ்வாகும். இதற்கு மாநில அரசை உடந்தையாகவும் ஆதரவாகவும் இருப்பது தேசிய இறையாண்மைக்கு எதிரான விஷயமாகும். அவ்வகையில் உச்ச நீதிமன்றம் தனது கடமையை சட்டத்தின் வழியில் நிறைவேற்றுவதற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இனி இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொண்டு திமுகவினர் எங்களுக்கு ஆட்சி போனாலும் பரவாயில்லை . கட்சியே போனாலும் பரவாயில்லை. எங்களின் நோக்கம் சனாதன ஒழிப்பு ஒன்று தான் என்று அவர்களின் நிலைப்பாட்டில் உறுதியாக தெளிவாக இருப்பார்களா? என்பதே கேள்வி. இந்த சனாதன ஒழிப்பு என்னும் அவர்களின் அஜென்டாவும் அதற்காக அவர்கள் அரை நூற்றாண்டு காலம் தமிழகத்தில் செய்து வந்த ஒட்டுமொத்த செயல்களும் உச்சநீதிமன்றத்தில் சபை ஏறும் . அதன் வழியில் அனைத்திற்கும் சட்டத்தின் வழியில் ஒரு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே இங்குள்ள சனாதனிகளின் எதிர் பார்ப்பு.

அப்படி அல்லாமல் கடந்த காலங்களில் அரசியல் சட்ட சாசனங்களை கிழித்து எறிந்து விட்டு நீதிமன்றத்தில் வழக்கு என்று வரும்போது நாங்கள் அரசியல் சட்ட சாசனங்களை அவமதிக்கவில்லை. மாறாக நகல் பேப்பரை தான் கிழித்தெறிந்தோம். அதுவும் கூட வெற்று பேப்பரை தான் கிழித்தெறிந்தோம் நகல் கூட இல்லை என்று அப்படியே பல்டி அடித்து வேண்டுமானால் மன்னிப்பு கடிதம் கூட எழுதிக் கொடுக்க தயாராக இருக்கிறோம் என்று பேசி வழக்கில் இருந்து தப்பித்து வந்த கடந்த கால வரலாறை போல் ஏதும் செய்யாமல் இருக்க வேண்டும். ஒரு வேளை அப்படி தப்பிக்க நினைத்தால் அதுவும் அவர்களுக்கு மேலும் சிக்கலையே ஏற்படுத்தும்.

ஏனெனில் கடந்த காலங்களில் சமூக ஊடகங்கள் இல்லை. காணொளிகள் உள்ளிட்ட வசதிகள் இல்லை. ஆனால் தற்காலத்தில் அப்படி இல்லை. இது நடந்தது உள் அரங்க நிகழ்வு நிகழ்வுக்கு ஏற்பாடானது முதல் மாநில அரசின் அனுமதியோடு நடந்தது வரை அனைத்தும் அரசாங்க தரப்பில் ஆவணமாக இருக்கும். மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது பேசியது அதைப் பற்றி பொதுவெளியில் கருத்து தெரிவித்தது என்று அனைத்துமே ஆவணங்களாக நாடு முழுவதும் போய் சேர்ந்திருக்கிறது. அந்த வகையில் நான் அப்படி பேசவில்லை. இப்படித்தான் பேசினேன். பத்திரிகைகள் தான் திரித்து எழுதி விட்டது. பாஜக நிர்வாகி தான் திரித்து எழுதி விட்டார் என்றெல்லாம் இதில் பேசுவதற்கு வாய்ப்பே இல்லை. ஒரு வேளை மறுக்கும் பட்சத்தில் பல ஆண்டுகளாக அவர்கள் பேசிய பேச்சுக்கள் நடத்திய போராட்டங்கள் முன்வைத்த கருத்துக்கள் விமர்சனங்கள் என்று அத்தனையும் உச்ச நீதிமன்றத்தின் பார்வைக்கு போகக்கூடும். அது அவர்களின் அரசியல் எதிர் காலத்தையே சரிக்க கூடும்.

தாங்கள் செய்த சனாதன ஒழிப்பு மாநாடு என்ற மத துவேஷத்தை அவர்கள் ஒத்துக் கொண்டாலும் அது அவர்களின் ஆட்சிக்கு சிக்கல். ஒப்புக்கொள்ள மறுத்தாலும் அதை எதிர் தரப்பு ஆவணப்பூர்வமாக நிரூபிக்க வேண்டி அரை நூற்றாண்டு கால திமுகவின் சனாதன விரோத அரசியலை ஆவணப்படுத்தும் போது அது ஒட்டுமொத்தமாக கட்சிக்குமே சிக்கலாக மாறக்கூடும். திமுகவின் ஆதரவோடு நடந்து முடிந்த சனாதன ஒழிப்பு மாநாடு சட்டத்தின் முன்பே திமுகவினருக்கு இரண்டு வாய்ப்புகளை வழங்கி இருக்கிறது. நடந்து முடிந்த விஷயங்களை ஒப்புக்கொண்டு சட்டத்தின் விளைவுகளை ஏற்றுக் கொள்வதா? அல்லது தப்பிக்க முயன்று மேலும் சிக்கலை தேடிக்கொண்டு ஆட்சியைக் கடந்து கட்சிக்கும் சிக்கலைத் தேடிக் கொள்வதா? என்ற நிலையில் நிறுத்தி இருக்கிறது.


Share it if you like it